29 கிமீ மைலேஜை வாரி வழங்கற இந்த கார்ல போனா ஊரே உங்கள பாத்து பொறாமைப்படும்! விலை மெய்யாலுமே இவ்ளோதானா!

இந்திய கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் வாகனங்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 12,387 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12,164 ஆக மட்டுமே இருந்தது.

இது 2 சதவீத வளர்ச்சியாகும். இதன் மூலம் இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 9வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 6 கார்கள் இடம்பெற்றுள்ளன.

Maruti Suzuki Fronx

இதில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரும் ஒன்றாகும். சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதுதான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு கிடைத்து வரும் பிரம்மாண்டமான வரவேற்பிற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை 7.51 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 12.87 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதற்கு அடுத்தபடியாக மைலேஜ் (Mileage), இந்த காருக்கு கிடைத்து வரும் பிரம்மாண்டமான வரவேற்பிற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

Maruti Suzuki Fronx Rear Profile

இந்த காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 21.50 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் 1.2 லிட்டர் ட்யூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 21.79 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், 1.2 லிட்டர் ட்யூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.89 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

இவை எல்லாவற்றையும் விட இந்த காரின் 1.2 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி இன்ஜின் உடன், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுவதில்லை.

சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ் ஆகியவற்றுடன், இந்த காரில் ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன. இதில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவை முக்கியமான வசதிகளாக உள்ளன.

இந்த கார், பாதுகாப்பு வசதிகள் நிரம்பிய ஒன்றாகவும் உள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், 360 டிகிரி கேமரா மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

அத்துடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) ஆகிய கார்களுடனும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் போட்டியிட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பது எங்கள் கருத்து. இந்த காரின் டிசைன், சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருப்பது, கூடுதல் பலம்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 7, 2024, 19:41 [IST]
English summary
Maruti suzuki fronx sales report august 2024 2 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+