தி-நகர் சரவணா ஸ்டோரையே விற்பனையில் மிஞ்சிருச்சு! கமரகட்டு, குச்சி மிட்டாய் கணக்கா விற்பனையாகும் மாருதி கார்!
மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் ஒன்றாக ஃப்ரான்க்ஸ் இருக்கின்றது. இது பலினோவின் கிராஸோவர் டைப் ஆகும். இந்த கார் மாடலுக்கே தற்போது இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது விற்பனைக்கு வந்து ஒரு வருடத்திற்கும் குறைவான மாதங்களே ஆனநிலையில், சுமார் ஒரு லட்சம் யூனிட் விற்பனையை அந்த கார் மாடல் எட்டி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் ஒன்றே ஃப்ரான்க்ஸ் ஆகும்.

இது ஓர் கிராஸோவர் எஸ்யூவி ரக கார் மாடலாகும். இந்த கார் மாடலே நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக இப்போது மாறி இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஃப்ரான்க்ஸ் விற்பனைக்கு வந்து ஒரு வருடங்களுக்கும் குறைவாக ஆகின்ற நிலையில் 1 லட்சம் யூனிட்டுகள் ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் வெறும் 10 மாதங்களிலேயே இந்த அமோக விற்பனை வரவேற்பை அந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. இந்த கார் மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் முதன்முதலில் சென்ற ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, 24 ஏப்ரல் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக ஃப்ரான்க்ஸ் காரை மாருதி சுஸுகி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அட்டகாசமான தோற்றம், அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்கள் மற்றும் பிரீமியம் தர அம்சங்கள் ஆகியவற்றால் நிரம்பிய தயாரிப்பாகவே இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே இப்போதும் இந்த கார் மாடலுக்கு மிக அமோக வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
அதேவேளையில், இதன் அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்தின் காரணமாக இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 9 அங்குல ஸ்மார்ட்ப்ளே ப்ரோ பிளஸ் அம்சம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எச்டி தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் ஃபிங்கர் பிரிண்ட் அக்சஸும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் திரை, செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் ஃப்ரான்க்ஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற நவீன அம்சங்களை மட்டுமே இந்த கார் தாங்கி இருக்கவில்லைங்க, இது அதிக மைலேஜையும் வழங்கும்.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பூஸ்டர்ஜெட் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் என இரு விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கின்றது. இந்த மோட்டார்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரின் 5 ஸ்பீடு மேனுவல் தேர்வு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 21.79 கிமீ மைலேஜையும், இதே மோட்டாரின் ஏஎம்டி தேர்வு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.89 கிமீ வரையில் மைலேஜையும் வழங்கும். இதேபோல், இதன் 1.0 லிட்டர் பூஸ்டர்-லிட் பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.01 கிமீ - 21.5 கிமீ வரையில் மைலேஜையும் வழங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது மிக சிறந்த மைலேஜ் திறன் ஆகும். இத்தகைய மைலேஜ் திறனை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கொண்டிருப்பதனாலும் அக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே 10 மாதங்களில் சுமார் 1 லட்சம் யூனிட் ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








