டர்போ இன்ஜின் என்ன பணக்காரன் வீட்டு சொத்தா? மிடில் கிளாஸ் மக்களுக்கான மாருதியின் மாஸ்டர் பிளான்!

மாருதி நிறுவனம் தனது ஃபிராங்க்ஸ் காரின் டர்போ இன்ஜின் ஆப்ஷனை அனைத்து வேரியன்ட்களிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அந்த காரின் விற்பனையை அதிகப்படுத்த அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே சிறப்பாக விற்பனையில் இருக்கும் இந்த கார் இந்த முடிவின் காரணமாக இன்னும் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் காராக ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகி ஒரு வருடம் ஆவதற்குள் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து சிறப்பு சாதனையை படைத்துள்ளது. இந்த மைல்கல்லை படைத்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது புதிதாக மற்றொரு செய்தி வெளியாகி உள்ளது.

maruti suzuki fronx turbo

அதன்படி மாருதி நிறுவனம் இந்த ஃபிராங்க்ஸ் காரின் விற்பனையை அதிகரிக்க அதன் டர்போ இன்ஜின் ஆப்ஷனை அனைத்து வேரியன்டுகளுக்கும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மாருதி நிறுவனத்திடம் ஃபிராங்க்ஸ் காரில் தற்போது 1.2 லிட்டர் கே 12சி பெட்ரோல் இன்ஜின் பைக் இன்ஜின் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகிய மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

இதில் 1.2லிட்டர் கே12சி பெட்ரோல் இன்ஜின் தான் அதிக எண்ணிக்கையிலான விற்பனையில் இருக்கிறது. ஒட்டுமொத்த விற்பனையில் சிஎன்ஜி இன்ஜின் கொண்ட கார்களின் விற்பனை 16சதவீதமும் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட காரின் விற்பனை 7 சதவீதமும் இருக்கிறது டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட காரின் விற்பனை மிகக் குறைவாக இருப்பதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் டாப் வேரியன்ட்களில் மட்டும் தான் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது.

maruti suzuki fronx turbo

அதாவது டெல்டா பிளஸ், ஜெட்டா மற்றும் ஆல்பா ஆகிய வேரியன்டுகளில் மட்டுமே டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இதனால் இந்த இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அதிக விலை கொண்ட காரை தான் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குறைவான எண்ணிக்கையிலான மக்களே இந்த டர்போ இன்ஜின் கொண்ட வேரியன்ட்களை தேர்வு செய்து வருகின்றனர்.

இதனால் மாருதி நிறுவனம் தனது வேரியன்ட்களை புதுப்பிக்கும் வகையில் 1.0 லிட்டர் இன்ஜினை என்ட்ரி லெவல் காரான ஸிக்மா வேரியன்ட் முதல் ஆப்ஷனாக வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோலின் விற்பனை 25-30 சதவீதம் அதிகரிக்கும் என மாருதி நிறுவனம் கணித்துள்ளது. அதே நேரம் டர்போ இன்ஜின் ஆப்ஷன் இல்லாத கே 12 சி பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் வாடிக்கையாளர்கள் கேட்டு வருகின்றனர்.

maruti suzuki fronx turbo

இதனால் இந்த ஆப்ஷனையும் சேர்த்து வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த புதிய அப்டேட்டை விரைவில் கொண்டு வர நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் 1.0 லிட்டர் டர்போ இன்ஜினை முழுமையாக இந்தியாவில் தயாரிக்க மாருதி நிறுவனம் ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்துள்ளது. இதனால் இதன் விற்பனையை அதிகரிக்க தேவையான யுக்திகளை எல்லாம் கையில் எடுத்துள்ளது.

மாருதி நிறுவனத்தின் இந்த ஃபிராங்க்ஸ் கார் கட்ந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தான் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த கார் கடந்த ஏப்ரல் மாதம் தான் விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்து ஒரு வருடத்திற்கு முன்னாலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி விட்டன. இதனால் எதிர்காலத்தில் ஃபிராங்க்ஸ் கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனம் இந்த ஃபிராங்க்ஸ் காருக்காக தயாரித்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் நிறுவனத்தின் மிக முக்கியமான இன்ஜினாக மாற உள்ளது. மாருதி நிறுவனம் இந்த இன்ஜினை தனது மற்ற கார்களுக்கும் பொருத்தி அதை விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தனியாக நடந்து வருகின்றன.

இதனால் விரைவில் மாருதி நிறுவனத்தின் மற்ற கார்களிலும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை உங்களால் காண முடியும். டர்போ பெட்ரோல் இன்ஜின் ரசிகர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வரபிரசாதமான செய்தியாக இருக்கும். குறிப்பாக சிறிய ரக கார்களுக்கு இந்த இன்ஜின் மிக பொருத்தமான இன்ஜினாக இருக்கும் என்பதால் மாருதி நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரில் டர்போ இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அதிக விலை கொடுத்து காரை வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இனி அதை மாற்றி இனி குறைவான விலையிலும் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட காரை வாங்கலாம் என மாருதி நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவு நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.12:35 PM 1/29/2024

More from DriveSpark

Article Published On: Monday, January 29, 2024, 13:05 [IST]
English summary
Maruti suzuki fronx turbo more affordable details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X