பைக் மாரி மைலேஜ் தரும் இந்த காரில் ஊரையே ஏத்தீட்டு போலாம்! மக்கள் மாருதிய தலையில தூக்கி வெச்சு கொண்டாட போறாங்க
இந்திய சந்தையில் 7 சீட்டர் கார்களுக்கான (7 Seater Cars) வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு ஏராளமான 7 சீட்டர் கார்களை இந்தியாவில் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.
இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனம் புதிதாக ஒரு 7 சீட்டர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரின் 7 சீட்டர் வெர்ஷன் ஆகும். இது இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களில் ஒன்று.

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுடன், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா போட்டியிட்டு வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில் 5 சீட்டர் மாடலில் மட்டுமே மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கிடைக்கிறது.
எனவே இதன் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் வேகமாக தயாராகி வருகிறது. 3 வரிசைகளை கொண்ட இந்த புதிய மாடல், டாடா சஃபாரி (Tata Safari), ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும்.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் மாடல், இந்திய சந்தையில் அடுத்த வருடம் (2025) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒய்17 (Y17) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த காரில், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் (Strong Hybrid Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மைலேஜ் (Mileage) ஒரு லிட்டருக்கு சுமார் 27 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைன் (Design) என்ற அம்சத்தை பொறுத்தவரையில், 5 சீட்டர் மாடலிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆம்பியண்ட் லைட்டிங், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற அம்சங்கள் எல்லாம் இடம்பெறலாம்.
இவை தவிர, அடாஸ் (ADAS), பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப விலை (Price) 10.70 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் இதன் 7 சீட்டர் மாடலின் ஆரம்ப விலை சுமார் 15 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டாப் வேரியண்ட்டின் விலை சுமார் 25 லட்ச ரூபாய் அளவிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என்பதுடன், நிறைய பேர் பயணம் செய்யவும் வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் மாடல் மிகவும் ஏற்றதாக இருக்கும். இது பிரீமியமான வசதிகளை கொண்ட காராக வரவிருப்பது கூடுதல் சிறப்பு.


Click it and Unblock the Notifications








