பைக் மாதிரி மைலேஜ் தரும் இந்த கார்ல ஒரு திருவிழா கூட்டமே ஒன்னா உக்காந்து போலாம்! உண்மையாலுமே விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). தற்போதைய நிலையில் 5 சீட்டர் வெர்ஷனில் மட்டுமே இந்த கார் கிடைத்து வருகிறது. 5 சீட்டர் கார் என்பதால், 2 வரிசைகளை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் க்ராண்ட் விட்டாரா காரில் ஒரு வரிசையை கூடுதலாக இணைத்து, 3 வரிசைகளை கொண்ட காராக விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது.

இந்த புதிய மாடல் 3 வரிசைகளை கொண்டிருக்கும் என்பதால், 7 பேர் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷன் வரும் 2025ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Maruti Suzuki Grand Vitara

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா 7 சீட்டர் மாடலில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் ஆகியவை ஆகும்.

இதில், மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 103 பிஎஸ் மற்றும் 107 என்எம் ஆக இருக்கலாம். மறுபக்கம் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 116 பிஎஸ் மற்றும் 122 என்எம் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Suzuki Grand Vitara Side Design

இந்த 2 இன்ஜின்கள் உடனும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷனில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் டாடா சஃபாரி (Tata Safari), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா 7 சீட்டர் கார் விற்பனையில் கடுமையான சவாலை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதில், ஹூண்டாய் அல்கஸார் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், வரும் செப்டம்பர் 9ம் தேதி (September 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் மாடலின் ஆரம்ப விலை அனேகமாக 13 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.

இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும். ஒருவேளை ஆரம்ப விலை இந்த அளவில் இருந்தால், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷன் பெரும் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய, அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்யக்கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வேரியண்ட் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் 5 சீட்டர் மாடலின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. கிட்டத்தட்ட இதே அளவிலான மைலேஜை, க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் மாடலிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 29, 2024, 17:12 [IST]
English summary
Maruti suzuki grand vitara 7 seater launch in 2025 what we know so far
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+