மாருதியோட இந்த காரை எஸ்யூவி கார் பிரிவின் ராஜானு சொல்லலாம் போலையே! என்னங்க இப்படி தயார் பண்ணி வச்சிருக்காங்க!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் முன்னணி எஸ்யூவி (SUV) கார் மாடல்களில் ஒன்றான கிராண்ட் விட்டாரா (Grand Vitara)-வில் ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல மேம்பட்ட சிறப்பம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது. இந்த காரில் கார் இணைப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களையும் அது வழங்கி இருக்கின்றது. இந்தியாவில் நவீன அம்சங்கள் நிறைந்த கார் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை அறிந்தே, இதுமாதிரியான தரமான சிறப்பம்சங்களை மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவில் வழங்கி இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, இந்த காரை மாடலை சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனமாகவும் அது தயார் செய்திருக்கின்றது. இதற்காக மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பமே அந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இது நம்முடைய மிகப் பெரிய தேவையான மைலேஜ் தேவையையும் பூர்த்தி செய்கின்றது. அதுதவிர, சிறந்த செயல்திறனையும் அது வெளியேற்றுகின்றது.

இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை கிராண்ட் விட்டாரா தன்னுள் தாங்கி இருக்கின்றது. அவைபற்றிய தகவலையே விரிவான தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். அதாவது, கிராண்ட் விட்டாராவில் வழங்கப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம், எஞ்சின், ஹைபிரிட் டெக்னாலஜி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்தை பற்றிய தகவலையும் பார்க்க உள்ளோம். வாங்க பதிவிற்குள் போகலாம்.
கிராண்ட் விட்டாராவின் ஸ்பெஷல் அம்சங்கள்: வலுவான ஹைப்ரிட் எஞ்சினுடன் இந்த கார் வருகிறது. இது ஒரு பெட்ரோல் இயந்திரத்தை, ஒரு மின்சார மோட்டாருடன் இணைத்து, மேம்படுத்தப்பட்ட எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான மாசு உமிழ்வை வழங்குகிறது. குறிப்பாக, இந்த ஹைபிரிட் அம்சம் கொண்ட கிராண்ட் விட்டாரா ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 27.97கிமீ வரையில் மைலேஜை தரும். இத்துடன் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. அது ஒரு கிலோவிற்கு 29கிமீட்டர் மைலேஜ் தரும்.
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்: இந்த காரில் மாருதி சுஸுகி மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் பலவற்றை வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக ஆன்டி லாக்கிங் பிரேக்கி சிஸ்டம் (Anti-lock Braking System), இபிடி உடன் கூடிய ஏபிஎஸ்..
..சென்ட்ரல் லாக்கிங், இஎஸ்பி (Electronic Stability Program), ஹில் அசிஸ்ட், பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்ட் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் விரைவில் இந்த காரில் அடாஸ் அம்சத்தை வழங்குவதற்கான முயற்சியிலும் மாருதி சுஸுகி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.
கிராண்ட் விட்டாராவில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதை இதை வெளிக்காட்டுகின்றது. மேம்பட்ட ஓட்டுநர்-உதவி அமைப்புகளைச் சேர்ப்பதன் வாயிலாக விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க முடியும். இதுவே நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. மேலும், அடாஸ் அம்சம் சேர்க்கப்படும் எனில் பிளைண்ட்-ஸ்பாட் கண்டறிதல் மற்றும் அவசரகால பிரேக்கிங் போன்ற அம்சங்களை கிராண்ட் விட்டாரா பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
காரின் உட்பக்கம்: கிராண்ட் விட்டாராவின் உட்பக்கம் விசாலமானதாக உள்ளது. மேலும், ஐந்து பேர் வரை தாராளமாக அமர்ந்துச் செல்லும் வகையில் இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், போதுமான கால் அறை மற்றும் அதிக பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான இட வசதியும் இதில் உண்டு.
அத்துடன், நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. 9.0 அங்குல அளவு கொண்டதே அது ஆகும். இந்த திரை டச் வசதிக் கொண்டது. இத்துடன், ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்பமும் அதில் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-ப்ளே இரண்டையும் இந்த திரை ஆதரிக்கும்.
இவை பயணத்தின்போது மற்றவர்களுடன் இணைந்திருக்க, அட்வான்ஸ்டு ரைடு அனுபவத்தைப் பெற மிக உதவியாக இருக்கும். கூடுதல் சிறப்பம்சங்களாக ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், காரின் பின் பக்கத்திற்கான ஏசி வெண்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி, சாவியில்லாமல் காருக்குள் நுழையும் வசதி என ஏகப்பட்டவை கிராண்ட் விட்டாராவில் வழங்கப்பட்டிருக்கின்றன.
செயல்திறன்: செயல்திறன் விஷயத்திலும் இந்த கார் அதன் பயனர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது என்றே கூறலாம். குறிப்பாக, ஹைப்ரிட் அம்சம் கொண்ட தேர்வு மென்மையான மற்றும் அதீத திறனை வெளியேற்றக் கூடியதாக உள்ளது. 1.5 லிட்டர், 3 சிலிண்டர், அட்கின்சன் சைக்கிள் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இது, ஸ்ட்ராங்க் ஹைபிரிட் தொழில்நுட்த்துடன் இணைந்து 114.5 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளியேற்றும். வழக்கமான தேர்வு கிராண்ட் விட்டாராவில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், மோட்டார் அதிகபட்சமாக 101.6 பிஎச்பி பவரையும், 117 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
சுற்றுச்சூழல் பாதிப்பு: கிராண்ட் விட்டாராவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கார்பன் தடயங்களைக் குறைப்பதில் நம்மால் பங்களிக்க முடியும். குறிப்பாக, ஹைபிரிட் அம்சம் கொண்ட தேர்வை வாங்கும்போது மிகப் பெரிய பங்களிப்பு நம்முடையதாக இருக்கும். இதில் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் விதமாக மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பேட்டரி பேக் காரின் இயக்கத்தின் வாயிலாகவே மின்சாரத்தைச் சேமித்து அதை மீண்டும் காரின் இயக்கத்திற்கே பயன்படுத்தும். இவ்வாறு செய்வதனால் எரிபொருள் பலமடங்கு சிக்கனமாகி, மாசு வெளிப்பாடு கணிசமாக குறைக்கப்படுகின்றது. இதனால்தான் இந்த அம்சம் மிக சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதற்காகவே இந்தியர்கள் பலர் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இணைப்பு அம்சங்கள்: இந்த காரில் அதி நவீன இணைப்பு வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒருங்கிணைந்த தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திலே அந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே கூறியதைப் போல ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளை இது தாங்கி இருக்கின்றது.
இதன் வாயிலாக பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை இணைத்துக் கொள்ள முடியும். மேலும், எப்போதும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். குறிப்பாக பயனர்களுக்கு மிக சிறந்த பலனை வழங்கும் வகையில், குரல் கட்டளைகளை ஆதரிக்கும் வசதி, நிகழ்நேர போக்குவரத்து குறிப்புகள் மற்றும் வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்டவற்றையும் அது வழங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் (கிராண்ட் விட்டாரா) மூலம் ஓட்டுநர் அனுபவத்தை மாருதி சுஸுகி மறுவரையறை செய்துள்ளது என்றே கூறலாம். வாகனத்தின் மேம்பட்ட அம்சங்கள் அதன் போட்டி வாகன மாடல்களுக்கு மிகப் பெரிய சவாலை வழங்கிக் கொண்டிருக்கின்றது. கார் இணைப்பு அம்சம், செயல்திறன் மற்றும் மைலேஜ் என அனைத்திலும் கை தேர்ந்த கார் மாடலாக கிராண்ட் விட்டாரா இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








