மாருதி சுஸுகியை பெருமைப்படுத்த போகும் கார்... விபத்து எந்த பக்கம் நடந்தாலும் கல்லு மாதிரி நிற்கும்!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்கள் என்றாலே விலை குறைவானவை மற்றும் நல்ல மைலேஜ் தரக்கூடியவை என்கிற கருத்து உள்ளது. ஆனால், பாதுகாப்பு தரத்தை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி கார்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துகளே உள்ளன. இருப்பினும், தனது காரின் பாதுகாப்பு தரத்தை வெளியுலகிற்கு நிரூபிக்கும் வகையில், மாருதி சுஸுகி நிறுவனம் அதன் கிராண்ட் விட்டாரா காரை பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தி உள்ளது. ஆனால் இன்னும் கிராண்ட் விட்டாராவின் மோதல் முடிவுகள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் மோதல் சோதனைகளில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார் உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் கிராண்ட் விட்டாரா கார் எத்தகைய மதிப்பெண்களை பெறலாம் என்பதை பற்றியும், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பலேனோ, பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா கார்களை பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. அங்கு இந்த மாருதி கார்கள் மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பே மாருதி சுஸுகி கார்களின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஜூலை மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இன்னும் அதுகுறித்த அறிக்கைகள் வெளிவரவில்லை.
இந்த நிலையில்தான், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார் உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. மாருதி சுஸுகியின் விலையுயர்ந்த காராக கிராண்ட் விட்டாரா விளங்குகிறது. கீழே பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், பாரத் என்சிஏபி ஆலையினுள் வெள்ளை நிறத்திலான கிராண்ட் விட்டாரா கார் மோதலுக்கு உட்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவதை காணலாம்.

இதன்படி பார்க்கும்போது, கிராண்ட் விட்டாரா கார் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் நல்ல மதிப்பெண்களை பெறும் என எதிர்பார்க்கிறோம். வீடியோவில், கிராண்ட் விட்டாரா கார் முன்பக்க மோதல், பக்கவாட்டு மோதல் மற்றும் பக்கவாட்டு முனை மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த அனைத்து சோதனைகளிலும் கிராண்ட் விட்டாரா கார் மோதல்களை தாங்கிக் கொண்டு நிற்பதை பார்க்க முடிகிறது.
இதனால், இந்த அனைத்து சோதனைகளிலும் கிராண்ட் விட்டாரா கார் உள்ளே இருக்கும் பயணிகளை பாதுகாக்கும் என்பதை உறுதிப்படுத்துவது போன்று முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். இந்த அனைத்து சோதனைகளிலும் கிராண்ட் விட்டாரா காரினுள் ஏர்பேக் விரிவடைந்து இருப்பதை பார்க்க முடிகிறது. இத்தகைய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களில் காரின் ஏர்பேக் ஆனது மிக முக்கியமான ஒன்றாகும்.

பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவுக்கு ஐந்திற்கு மொத்தம் எத்தனை ஸ்டார்கள் வழங்கப்பட உள்ளன என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஃப்ரான்க்ஸ் கார்களையும் பார்க்க முடிகிறது. மேலும், அந்த கார்களும் சோதனையில் சிறப்பாக செயல்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி, இந்தியாவின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும், மாருதி சுஸுகி கார்களை பற்றிய ஒரு நெகட்டீவ் பார்வை மக்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக, மாருதி சுஸுகி கார்களின் பாதுகாப்பு தரம் குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன. இதனை எல்லாம் சரி செய்ய வேண்டுமெனில், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டை மாருதி சுஸுகி நிறுவனம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









