இந்த காரின் மைலேஜிற்கு முன்னால பைக், ஸ்கூட்டர்லாம் ஓரமாதான் நிக்கணும்! வாங்கறதுக்கு மக்கள் தவம் கெடக்கறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் 6,988 க்ராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 6,171 ஆக மட்டுமே இருந்தது. இது 15 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யூவி காரானது, 10.70-19.99 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலைக்கு இது மிகவும் சிறப்பான கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) உள்ளிட்ட கார்களுடன், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் போட்டியிட்டு கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில், 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மைல்டு-ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
இதுதவிர 1.5 லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த இன்ஜின் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கிறது.
இவை எல்லாம் தவிர மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் சிஎன்ஜி வெர்ஷன்களில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் சிஎன்ஜி வெர்ஷன்கள், ஒரு கிலோவிற்கு 26.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி சிறப்பான மைலேஜ் உடன், பல்வேறு அதிநவீன வசதிகளும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்படுகின்றன. இவை எல்லாம்தான் இந்த காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதைய நிலையில் 5 சீட்டர் மாடலில் மட்டுமே கிடைத்து வரும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷன், வரும் 2025ம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கு பிறகு இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, தற்போது இருப்பதை காட்டிலும் மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








