27.97 கிமீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க மக்கள் ரொம்ப குழம்புறாங்க! ஏன் தெரியுமா?
சுஸூகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி சிறப்பாக விற்பனை செய்து வருகிறது. இந்த கார் மக்கள் விரும்பும் வகையில் பல்வேறு விதமான ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த காரை வாங்க நினைக்கும் மக்கள் எந்த இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காக உதவும் வகையில் இந்த காரின் இன்ஜின் ஆப்ஷனை அடிப்படையாகக் கொண்ட சில தகவல்களை உங்களுடன் பகிர்கிறோம்.
மாருதி சுஸூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார் மக்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காராக இருக்கிறது. இந்த கார் அறிமுகமானது முதல் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. குடும்பத்துடன் பயணிக்க விரும்பும் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த காரில் ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருப்பதால் இந்த காரை மக்கள் விரும்பி வாங்குவதற்கான பல்வேறு காரணங்கள் இந்த காரில் இருக்கின்றன.

மாருதி கிராண்டு விட்டாரா காரை பொருத்தவரை ஒரே ஒரு இன்ஜி்ன் தான் இருக்கிறது இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினாக இருக்கிறது. ஆனால் இதில் சில வேரியன்ட்களில் மட்டும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் பொருத்தப்பட்ட இன்ஜினும் விற்பனைக்கு வருகிறது. அதாவது நேரடியாக பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹைபிரிட் பொருத்தப்பட்ட பெட்ரோல் இன்ஜின் என இரண்டு விதமான ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
ஹைபிரிட் இன்ஜின் என்றால் பெட்ரோல் இன்ஜினுடன் சேர்ந்து கூடுதலாக எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரியும் பொருத்தப்படும். குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனம் பயணிக்கும் போது இது எலெக்ட்ரிக் பவரிலும் இயங்கும் இதன் மூலம் குறைவான பெட்ரோல் செலவில் நீண்ட தூரம் மற்றும் அதிக பவரில் பயணிக்க முடியும். இதன் காரணமாகவே ஹைபிரிட் கார்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருக்கிறது.

இதன் கியர் ஆப்ஷனை பொருத்தவரை மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல், 6ஸ்பீடு டிசி, மற்றும் சிவிடி ஆகிய கியர் ஆப்ஷன்கள் உள்ளன. சிஸ்டத்தில் இந்த கார் 91.1பிஎச்பி பவரையும் 122என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே ஹைபிரிட் இல்லாத நேரடி பெட்ரோல் இன்ஜின் மட்டும் பொருத்தப்பட்ட வாகனத்தை பொருத்தவரை 101.64பிஎச்பி பவரையும், 136.8என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா காரை பொருத்தவரை ரூபாய் 10.99 லட்சம் முதல் ரூபாய் 20.9 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை தான். ஆன்ரோடு விலை என்பது இதைவிட சற்று கூடுதலாக இருக்கும். இப்பொழுது நீங்கள் எந்த இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கலாம்.

முதலில் உங்கள் தேவைகளை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த காரில் என்னென்ன ஆப்ஷன்கள் வேண்டும் என தெளிவுபடுத்திக் கொண்டு அந்த ஆப்ஷன்கள் எல்லாம் எந்த வேரியன்டில் இருக்கிறது என முதலில் செக் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த வேரியன்டில் ஹைபிரிட் ஆப்ஷன் இருக்கிறதா இல்லையா என்பதையும் செக் செய்து கொள்ளுங்கள். நீங்கள் பெட்ரோல் வேரியன்டை வாங்க வேண்டுமா அல்லது ஹைபிரிட் வேரியன்டை வாங்க வேண்டுமா என்ற குழப்பம் வரும்.
இந்த நேரத்தில் நீங்கள் முக்கியமாக கணக்கிட வேண்டியது மைலேஜ் தான் கிராண்ட் விட்டாரா காரை பொருத்தவரை மைல்டு ஹைபிரிட் வேரியன்ட் வேகமாக செல்லும்போது இது கூடுதல் பவரை கொடுப்பதால் சாதாரண பெட்ரோல் வேரியன்டிருக்கும் ஹைபிரிட் வேரியன்டிற்கும் மைலேஜ் மிகப்பெரிய அளவு வித்தியாசம் இருக்கும். மைல்டு ஹைபிரிட் கார் 27.97கி.மீ மைலேஜ் தரும்.ஹைபிரிட் இல்லாத வேரியன்ட் 19.38கி.மீ மைலேஜ் தரும்.
நீங்கள் காரை அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்க பயன்படுத்துவீர்கள் என்றால் உங்களுக்கு மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் நல்லா வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் ஏகப்பட்ட பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த முடியும். நீங்கள் காரை அவ்வப்போது தான் பயன்படுத்துவேன் பெரிய அளவில் பயன்படுத்த மாட்டேன் என்ற நபராக இருந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி தேவை இல்லை பெட்ரோல் ஆப்ஷனை போதுமானது.
மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பொறுத்தவரை நீங்கள் காரின் விலையில் மாற்றங்கள் இருக்கும். இதனால் நீங்கள் அதிகம் பயன்படுத்தவில்லை என்றால் நீங்கள் கொடுக்கும் எக்ஸ்ட்ரா விலை என்பது உங்களுக்கு பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துவதுடன் கணக்கிடும்போது பெரிய அளவில் பணம் மிச்சம் ஆகாது. இதனால் நீங்கள் பெட்ரோல் இன்ஜின் மட்டும் கொண்ட வேறு என்று தேர்வு செய்வது நல்லது. இதில் சிஎன்ஜி வேரியன்ட் ஆப்ஷனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா காரை பொருத்தவரை குடும்பங்கள் பயணிக்கும் வகையில் ஏற்ற காராக இருப்பதால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வருகிறார்கள். முக்கியமாக இது மாருதி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் கூட மக்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த காரை நீங்கள் வாங்குவீர்கள் என்றால் என்ன காரணத்திற்காக வாங்குவீர்கள் என கமெண்ட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications









