மைலேஜ் லிட்டருக்கு 28 கிமீ தரும்.. ஆனா இந்த சிறப்பு அம்சங்கள் அந்த காருல இல்லையா! கொஞ்சம் வருத்தம்தான்!!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக அதிகம் மைலேஜ் தரக் கூடிய எஸ்யூவி (SUV) ரக கார் மடாலாக மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் கிராண்ட் விட்டாரா (Grand Viatara) இருக்கின்றது. லிட்டருக்கு இந்த கார் 28 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரீமியம் அம்சங்களும் இந்த காரில் அதிகளவில் வழங்கப்பட்டு இருப்பதனால் இரு தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, அதிகம் மைலேஜை விரும்புவோர் மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களை விரும்புவோர் என பலதரப்பினரை இந்த கார் கவர்ந்துக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான ஓர் சூப்பரான கார் மாடலில் மாருதி சுஸுகி நிறுவனம் சில முக்கியமான அம்சங்களை வழங்க தவறிவிட்டது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அந்த அம்சங்கள் என்ன என்பதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (Electronic parking brake): ஆடம்பர வாகனங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த அம்சம் தற்போது பல தொடக்க நிலை கார் மாடல்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த அம்சத்தை மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவில் இடம் பெறவில்லை.
வாகனத்தை பார்க் செய்யும் போது அது நகர்ந்துவிடாமல் இருக்க இந்த அம்சம் உதவுகின்றது. லிவருக்கு பதிலாக ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் போதும் அது இந்த வேலையை பார்த்துக் கொள்ளும். ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற போட்டி கார் மாடல்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
மழையின்போது தானாக வேலை செய்யும் வைப்பர்கள் (Rain sensing wipers): இன்றைய நவீன கால கார்கள் பலவற்றில் இந்த அம்சமும் தற்போது பொதுவானதாக மாறிவிட்டது. இந்த அம்சம் மழை காலத்தில் மேனுவலாக வைப்பரை ஆன் செய்யும் செயல்முறைக்கு விடைகொடுத்துள்ளது. மழை வரும்போது தானாக அது வைப்பரை ஆக்டிவேட் செய்து விண்ட்ஸ்கிரீனில் இருக்கும் தண்ணீரைக் வெறியேற்றும். இத்தகைய அம்சத்தையே கிராண்ட் விட்டாராவில் மாருதி சுஸுகி வழங்கவில்லை.
பின் பக்கத்திற்கான சன் ஷேட் (Rear sun shades): பின்னால் உள்ள இருக்கையில் அமர்பவர்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் உட்பக்கம் வரும் சூரிய ஒளியைத் தடுப்பதே சன் ஷேட்களின் பனியாகும். இதையே மாருதி சுஸுகி இந்த கார் மாடலில் வழங்க தவறிவிட்டது.
அதேவேளையில், வெளிப்புற சந்தையில் இருந்து வாங்கிப் பொருத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், அனைத்தும் நம்முடைய காரின் நிறத்திற்கு பொருந்துமா என்பது சந்தேகம்தான். அதேவேளையில், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களில் இந்த அம்சத்தை தயாரிப்பு நிறுவனமே வழங்குகின்றன.
முன் பக்க பார்க்கிங் சென்சார் (Front parking sensors): கிராண்ட் விட்டாரா போன்ற பெரிய வாகனங்களை பார்க்கிங்கில் பாதுகாப்பாக நிறுத்த இந்த அம்சம் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த அம்சத்தை ஏனோ மாருதி சுஸுகி வழங்க தவறிவிட்டது. அதேவேளையில் போட்டி கார் மாடல்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மின்சார ஓட்டுனர் இருக்கை (Electric driver seat): மின்சாரத்தின் வாயிலாக தனக்கு ஏற்றவாறு டிரைவர்கள் இருக்கையை சரிசெய்யும் வசதியை மாருதி சுஸுகி தன்னுடைய இந்த கிராண்ட் விட்டாரா கார் மாடலில் வழங்கவில்லை. மேனுவலாக இதை மாற்றும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. ஹூண்டாய் க்ரெட்டா போன்ற கார் மாடல்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விடுபட்ட இந்த ஐந்து அம்சங்களும் மிகவும் முக்கியமான மற்றும் அதிக பலனை வழங்கக் கூடிய அம்சங்கள் ஆகும். இத்தகைய அம்சங்களையே மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவில் வழங்க தவறிவிட்டது. அதேவேளையில், தற்போது கிராண்ட் விட்டாராவில் வழங்கப்படும் அம்சங்களே போதுமானது என கூறி பலர் இந்த கார் மாடலை வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








