குடுக்குற காசுக்கு இந்த கார் தான் செம ஒர்த்! ஏழைகளும் இந்த காரை துணிஞ்சு வாங்கலாம்!
இந்தியாவில் மாருதி சுசுகியின் கிராண்ட் விட்டாரா காரின் விலை நிர்ணய யுக்தி கணிசமான ஈர்த்துள்ளது. போட்டி வாகன தயாரிப்பாளர்களின் வாகன விலைக்கு ஏற்பட இந்த காரின் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ 10.45 லட்சம் முதல் ரூ 19.65 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் பலவகையான வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விலை யுக்தி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கிராண்ட் விட்டாரா காரின் சிக்மா வேரியன்ட் கார் ₹10.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. டாப் வேரியன்ட் ஆல்ஃபா ஆல்வீல் டிரைவ் ஹைப்ரிட் வேரியன்டின் விலை ரூ 19.65 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலைகள் காரின் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பொருத்து மாறுபடுகின்றன.

மாருதி சுஸூகி நிறுவனம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களை கவர இதை இந்த காரை கொண்டு வந்துள்ளது. நியாயமான பட்ஜெட்டுக்குள் நம்பகமான மற்றும் அதிக அம்சம் நிறைந்த எஸ்யூவையைத் தேடும் நடுத்தர வருமானம் குடும்பங்களுக்கு உதவும் வகையில் இந்த காரின் விலையை நிர்ணயம் செய்துள்ளது.
கிராண்ட் விட்டாரா காரில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் போன்ற மேம்பட்ட அம்சங்கள் உள்ளன. இந்த அம்சங்கள் எல்லாம் தொழில்நுட்பம் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களின் கவனத்தை இந்த வாகனத்தை நோக்கி ஈர்த்துள்ளது. இதனால் இதன் விற்பனை அதிகமாகியுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் டாடா ஹாரியர் போன்ற போட்டி நிறுவனங்களின் காருக்கு எதிராக கிராண்ட் விட்டாரா காரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு நல்ல தயாரிப்பு கிடைப்பதில் மாருதி சுசுகியின் கிராண்ட் விட்டாரா கார் சிறப்பாக இருக்கிறது.
மாருதி சுஸுகி நிறுவனம் மிக தீவிரமாக இந்த காரை மார்க்கெட் செய்யும் பிரச்சாரங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் காரின் தனித்துவமான விற்பனையை ஏற்படுத்துகின்றன, பல்வேறு மார்கெட் பிரிவுகளில் அதிக விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த கார் சிறப்பாக அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காரின் வடிவமைப்பு, வசதி மற்றும் மைலேஜ் ஆகியவற்றைப் பாராட்டி வாடிக்கையாளர்களின் பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்த வருகின்றனர். இந்த வரவேற்பு மாருதி சுஸுகி நிறுவனத்தின் மார்கெட் ஊடுருவல் சிறப்பாக செய்துள்ளது நன்றாக இருக்கிறது. அந்நிறுவனம் இதற்காக சிறப்பாக பணியாற்றியுள்ளது.
மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா விலை நிர்ணய யுக்தியானது போட்டி நிறுவன தயாரிப்புகளுக்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அம்சங்கள் மற்றும் நோக்கம் மார்க்கெட்டிங் மூலம், இது இந்திய எஸ்யூவி சந்தையில் மாருதி சுஸுகியின் நிரந்த நிலையை வலுப்படுத்துகிறது.
மாருதி கிராண்ட் விட்டாரா கார் நிச்சயம் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக இருக்கும். தற்போது குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களை ாத்ன மக்கள் அதிகம் விரும்பி வருகிறார்கள். இதனால் இந்த ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதில் போட்டி நிறுவனங்களின் காரை ஒப்பிடும் போது கிராண்ட் விட்டாரா நல்ல தயாரிப்பு தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை என்ற விஷயத்தை வைத்து கிராண்ட் விட்டாரா காரை ஒப்பிடும் போது அது நிச்சயம் போட்டி தயாரிப்புகளுக்கு கடும் போட்டியை வழங்கும். இது குறைந்த பட்ஜெட் கார் வாங்க நினைப்பவர்கள் முதல் ஒரளவிற்கு அதிக பட்ஜெட் கார் வாங்க நினைப்பவர்கள் வரை அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்கிறது.


Click it and Unblock the Notifications









