இந்த விலைக்கு இப்படி ஒரு காரா! 28 கிமீ மைலேஜ் வழங்கும் மாருதி வண்டியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுது...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). இதன் பிப்ரவரி (February) மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11,002 க்ராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9,183 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 20 சதவீத வளர்ச்சியை மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா பதிவு செய்துள்ளது.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில், 1.5 லிட்டர் கே15சி மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் (Mild Hybrid Petrol) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த இன்ஜின் ஆப்ஷன் உடன், ஆல் வீல் டிரைவ் (All Wheel Drive) ஆப்ஷனையும் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த இன்ஜினின் மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 21.11 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 20.58 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

மறுபக்கம் ஆல் வீல் டிரைவ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.38 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 1.5 லிட்டர் 3 சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் (Strong Hybrid Petrol) இன்ஜின் ஆப்ஷனும், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், இ-சிவிடி (e-CVT) கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இது ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் என்பதால் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் தவிர மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன், 1.5 லிட்டர் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
இந்த சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பான மைலேஜ் தவிர, 6 ஏர்பேக்குகள், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என பல்வேறு அதிநவீன வசதிகளையும் (Features) மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் பெற்றுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப விலை வெறும் 10.80 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20.09 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக மைலேஜ், அனுமார் வால் போல் நீளும் வசதிகளின் பட்டியல் மற்றும் சரியான விலை நிர்ணயம் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை மிகவும் வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன என நாங்கள் கருதுகிறோம்.
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் தற்போதைய நிலையில் 5 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் இதன் 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கூடவே இந்த 7 சீட்டர் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








