28 கிமீ மைலேஜ் தர்ற காரை இந்த ரேட்லயா விக்கறாங்க! இருக்கற வேலய அப்படியே விட்டுட்டு ஷோரூம் போயர வேண்டியதுதான்!

இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு (Mid-size SUV) என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், மிகவும் அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) உள்ளது. இந்த காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 9,021 க்ராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 11,818 ஆக இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் விற்பனை 24 சதவீதம் குறைந்துள்ளது. எனினும் பண்டிகை காலம் வருவதால், வரும் மாதங்களில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Suzuki Grand Vitara

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில், 103 ஹெச்பி பவரை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் K15C மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர 115 ஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Grand Vitara Side Design

அது 87 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆப்ஷன்களிலேயே அதிக மைலேஜ் வழங்க கூடியது, ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்தான். இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இந்த காரின் மற்ற இன்ஜின் ஆப்ஷன்களும் கூட, 19-26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவைதான். எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மிகவும் சிறப்பான ஒரு ஆப்ஷனாக இருக்கும்.

சிறப்பான மைலேஜ் உடன், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்படுகின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.93 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் எம்ஜி அஸ்டர் (MG Astor), ஹோண்டா எலவேட் (Honda Elevate), கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 15, 2024, 17:37 [IST]
English summary
Maruti suzuki grand vitara sales report august 2024 24 per cent degrowth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+