28 கிமீ மைலேஜை வாரி வழங்கும் காரை வாங்க எல்லாரும் வரிசைல நிக்கறாங்க... இந்த ரேட்டுக்கு ஒர்த்தான கார்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டரா (Maruti Suzuki Grand Vitara). இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 9,397 க்ராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 9,079 ஆக மட்டுமே இருந்தது.

இது 4 சதவீத வளர்ச்சியாகும். இது ஓரளவிற்கு சிறப்பான வளர்ச்சி என்பதுடன், நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியலில் (Top 10 Mid-size SUVs), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா 3வது இடத்தை பிடித்துள்ளது.

Maruti Suzuki Grand Vitara

முதல் இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டாவும் (Hyundai Creta), 2வது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோவும் (Mahindra Scorpio) உள்ளன. 3வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப விலை இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 10.99 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.93 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா திகழ்கிறது.

Maruti Suzuki Grand Vitara Interior Design

இந்த காரின் பெட்ரோல்/ஆல் வீல் டிரைவ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.38 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 20.58 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 21.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு 26.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறுகிறது. இவை எல்லாவற்றையும் விட, பெட்ரோல்/ஹைப்ரிட் மாடல் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மைலேஜ் வழங்கும் அதே நேரத்தில், வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமில்லாத கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா திகழ்கிறது. இதில், 9 இன்ச் ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 6 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற வசதிகள் கொடுக்கப்படுகின்றன. வேரியண்ட்களை பொறுத்து, வசதிகள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி அஸ்டர் (MG Astor), ஹோண்டா எலவேட் (Honda Elevate), கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்!

More from DriveSpark

Article Published On: Saturday, August 10, 2024, 22:52 [IST]
English summary
Maruti suzuki grand vitara sales report july 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+