சொகுசு கார்களையே தூக்கி சாப்பிடும் மாருதி காரின் விலை இவ்ளோதானா! 28 கிமீ மைலேஜை வேற வாரி வழங்குது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் 9,679 க்ராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 10,486 ஆக இருந்தது.
இது 8 சதவீத வீழ்ச்சியாகும். 8 சதவீத வீழ்ச்சி என்றாலும் கூட, நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரானது, 3வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 20.09 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் பிரீமியம் மாடலாக களமிறக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள வசதிகளே இதற்கு சாட்சி. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 9 இன்ச் ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இந்த காரின் மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாகும்.

இதுதவிர 6 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், முன் பகுதியில் வென்லேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை.
6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ், நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் போன்ற பாதுகாப்பு வசதிகள் எல்லாம் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்படுகின்றன.
மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இந்த காரின் பெட்ரோல் ஹைப்ரிட் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசு வசதிகள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் மைலேஜ் என அனைத்து அம்சங்களிலும் தலைசிறந்த ஒரு தயாரிப்பாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா திகழ்ந்து வருகிறது. எனவேதான் இந்த காரை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி கொண்டுள்ளனர்.
இந்திய சந்தையில் இந்த காருக்கு நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்டிருப்பது, ஒரு சிறிய அளவிலான சரிவு மட்டுமே. இந்த சரிவில் இருந்து வரும் மாதங்களில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் மீண்டு வரும் என நாம் உறுதியாக நம்பலாம்.


Click it and Unblock the Notifications








