லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் காரை இவ்ளோ கம்மியான விலையில் விக்கறாங்களா! ஷோரூம்களில் கூட்டம் அலைமோதுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம், 9,736 க்ராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம், 8,877 ஆக மட்டுமே இருந்தது.

இது 10 சதவீத வளர்ச்சியாகும். இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரானது, நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையான மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

Maruti Grand Vitara

முதல் 2 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகிய கார்கள் உள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 20.09 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு தரமான தயாரிப்பாக கருதப்படுவதால்தான், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என நாம் கருதலாம். இதற்கு அடுத்தபடியாக இந்த காருக்கான வரவேற்புக்கு மைலேஜ் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

Maruti Grand Vitara Front View

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்படும், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா திகழ்கிறது.

வசதிகளை பொறுத்தவரையில், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவை, இந்த காரின் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ் மற்றும் அதிநவீன வசதிகள் ஆகிய காரணங்களால்தான், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2024, 23:55 [IST]
English summary
Maruti suzuki grand vitara sales report may 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+