யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக சாலையில் சென்ற கார்! மாருதி சுஸுகி பெருசா பிளான் போடுது!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கார்களுள் ஒன்று கிராண்ட் விட்டாரா (Grand Vitara) ஆகும். 5 இருக்கைகள் உடன் கிடைக்கும் கிராண்ட் விட்டாரா காரை எலக்ட்ரிக் (Electric) வெர்சனில் கொண்டுவர மாருதி சுஸுகி தயாராகி வருகிறது. இதற்கிடையில், கிராண்ட் விட்டாரா ஃபேஸ்லிஃப்ட் (Facelift) காரும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் கிராண்ட் விட்டாரா கார் ஒன்று சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை (Spy Images) பற்றி இனி பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி அடுத்த 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்வதற்காக பல புதிய கார்களை தயார் செய்து வருகிறது. அவற்றுள் 3 எஸ்யூவி கார்கள் அடங்குகின்றன. ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட், கிராண்ட் விட்டாரா 7-சீட்டர் மற்றும் இ-விட்டாரா எலக்ட்ரிக் கார் என்பன அவை மூன்றாகும்.

maruti suzuki grand vitara spotted

தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு இருப்பது, கிராண்ட் விட்டாரா காரின் 7-சீட்டர் வெர்சன் அல்லது ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மாருதி சுஸுகியின் முக்கியமான கார்களுள் ஒன்றாக விளங்கும் கிராண்ட் விட்டாரா ஆனது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா கர்வ், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் சிட்ரோன் ஏர்கிராஸ் உள்ளிட்ட்ட கார்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்குகின்றன.

இவ்வாறு பிரபலமான கார்களுக்கு போட்டியாக விளங்குவதினாலேயே கிராண்ட் விட்டாராவின் பலத்தை அதிகப்படுத்த மாருதி சுஸுகி நிறுவனம் விரும்புகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தில் கிராண்ட் விட்டாரா கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. குறிப்பாக, காரின் முன்பகுதி அதிகமாக மறைக்கப்பட்டுள்ளதால், இது கிராண்ட் விட்டாரா ஃபேஸ்லிஃப்ட் காராக இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

maruti suzuki grand vitara spotted

ஆனால், பொதுவாக புதிய ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டால் அதன் முன் மற்றும் பின்பகுதிகள் தான் மறைக்கப்படுவது வழக்கம். ஏனெனில், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடின்படி காரின் பக்கவாட்டு பகுதிகளில் பெரியதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், இந்த சோதனை ஓட்டத்தில் கிராண்ட் விட்டாரா காரின் மேற்கூரையை கூட யாருக்கும் தெரியாத வண்ணம் மறைத்துள்ளனர்.

அதேபோல், காரின் நீளமும் அதிகமாக இருப்பதுபோல் காட்சியளிப்பதால், இது கிராண்ட் விட்டாரா 7-சீட்டர் காராகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்த சோதனை கிராண்ட் விட்டாரா காரை சற்று உற்றுப் பார்த்தீர்கள் என்றால், விண்டோ லைன் (Window Line), மிரர் பொசிஷன் (Mirror Position) மற்றும் ஃபெண்டர் டிசைன் (Fender Design) உள்ளிட்டவை விற்பனையில் இருக்கும் கிராண்ட் விட்டாரா காருடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமாக இருப்பதை கவனிக்கலாம்.

maruti suzuki grand vitara spotted

முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் சற்று அதிகமாக இருப்பதுபோல் தெரிகிறது. அதுமட்டுமின்றி, மாருதி சுஸுகியை சேர்ந்த சில அதிகாரிகளும் 3 வரிசைகளில் இருக்கைகள் உடன் கிராண்ட் விட்டாரா வடிவமைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். கிராண்ட் விட்டாரா போன்ற சற்று விலைமிக்க காரை 7 இருக்கைகள் உடன் விற்பனை செய்வது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கக்கூடிய விஷயமாக இருக்கும்.

இவை இல்லாமல், இது இ-விட்டாரா எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டமாக இருக்கலாம் என்கிற பேச்சும் அடிப்படுகிறது. ஏனெனில், இ-விட்டாரா எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டங்களையும் கடந்த சில வாரங்களாக மாருதி சுஸுகி மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த சோதனை ஓட்ட கிராண்ட் விட்டாரா காரின் எல்இடி டி.ஆர்.எல் செட்அப் மற்றும் பம்பர் செட்-அப் உள்ளிட்டவை எலக்ட்ரிக் கார்களில் உள்ளதை போன்று மறைப்புகளை தாண்டி தெரிகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சோதனை ஓட்டம் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா 7-சீட்டர் காருக்காக இருப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது. அல்லது, ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மற்றும் 7-சீட்டர் வெர்சன் என இரண்டையும் ஒரே நேரத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாரா எஸ்யூவி காரில் வழங்கலாம். மறுப்பக்கம், மாருதி சுஸுகி இ-விட்டாரா காரை உருவாக்கும் பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருவதை மறந்துவிட வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 18, 2024, 8:00 [IST]
English summary
Maruti suzuki grand vitara spotted while testing assumed 7 seater version
மேலும்... #maruti suzuki #vitara #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X