ராணுவ வீரர்களுக்கான கேன்டீனில் மாருதியோட இந்த காரின் விலை இவ்ளோ கம்மியா! 28 கிமீ மைலேஜ் தரும் காருங்க இது!

இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் தயாரிப்பான கிராண்ட் விட்டாரா (Grand Vitara) இருக்கின்றது. மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா (Toyota) கூட்டணியில் உருவாக்கப்பட்டதே இந்த கார் மாடல் ஆகும். மாருதி சுஸுகி பிராண்டின்கீழ் இந்த கார் கிராண்ட் விட்டாரா எனும் பெயரில் விற்கப்படுவதைப்போல, டொயோட்டா பிராண்டின்கீழ் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) எனும் பெயரில் விற்கப்படுகின்றது.

இதன் ஆரம்ப விலை ரூ. 10.99 லட்சம் ஆகும். வரி, இன்சூரன்ஸ் என எந்த கட்டணமும் சேர்கப்படாத நிலையில் விற்கப்படும் விலையே இதுவாகும். இந்த எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே கிராண்ட் விட்டாரா நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆன்-ரோடில் இதன் விலை இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதே கார் மாடல் ராணுவ வீரர்களுக்கான கேன்டீனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Maruti suzuki grand vitara csd price

அங்கு சற்று குறைவான விலையிலேயே கிராண்ட் விட்டாரா விற்பனைக்குக் கிடைக்கின்றது. பொதுவாக ராணுவ கேன்டீனில் விற்கப்படும் பொருட்கள் பெரும்பாலும் விலை குறைவாகவே விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல், இந்த கார் மாடலும் சற்று குறைவான விலையிலேயே விற்கப்படுகின்றது. அப்படி என்ன விலை வித்தியாசத்தில் அங்கு கிராண்ட் விட்டாரா கார் மாடல் விற்கப்படுகின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ராணுவ கேன்டீனில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ரூ. 9,88,097 என்கிற விலையிலேயே விற்கப்படுகின்றது. ஜிஎஸ்டி பிளஸ் டிசிஎஸ் ஆகிய கட்டணங்கள் சேர்க்கப்பட்டநிலையிலான விலை விபரம் இதுவாகும். இதை வைத்து பார்க்கையில் 1,10,903 ரூபாய் நம்மைவிட குறைவான விலையில் ராணவ வீரர்களுக்கு ராணுவ கேன்டீனில் மாருதி கிராண்ட் விட்டாரா விற்கப்படுவது தெரிய வந்திருக்கின்றது.

இதைபோலவே கிராண்ட் விட்டாராவின் மற்ற வேரியண்டுகளும் மிகப் பெரிய அளவில் குறைவான விலையில் ராணுவ வீரர்களுக்கு ராணுவ கேன்டீனில் விற்கப்படுகின்றது. இந்தியாவில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் மேனுவல், மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் ஆட்டோமேட்டிக், ஹைபிரிட் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மற்றும் சிஎன்ஜி மேனுவல் ஆகிய ஆப்ஷன்களில் விற்கப்படுகின்றது.

மைல்டு ஹைபிரிட் - 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மேனுவல் (1.5L Mild Hybrid Petrol-Manual) ஆப்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கும் ட்ரிம்களும் அதன் விலை விபரமும்: சிக்மா, டெல்டா, ஜீட்டா, ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா 4டபிள்யூ ஆகிய தேர்வுகளில் இதை வாங்கிக் கொள்ள முடியும்.

இதில் சிக்மாவின் விலையையே முன்னதாக பார்த்தோம். இதற்கு அடுத்தபடியாக டெல்டா இருக்கின்றது. இது 12.20 லட்சம் ரூபாய் எனும் எக்ஸ்-ஷோரூம் விலையில் சாதாரண குடிமக்களுக்கு விற்கப்படுகின்றது. இதே தேர்வை ராணுவ வீரர் ராணுவ கேன்டீனில் வாங்கினால் ரூ. 11.13 லட்சத்திற்கே வாங்கிக் கொள்ள முடியும்.

இதேபோல், ரூ. 14.01 லட்சத்திற்கு விற்கப்படும் ஜெட்டா பெட்ரோல் மேனுவல் தேர்வு ரூ. 12.63 லட்சத்திற்கும், ரூ. 15.51 லட்சத்திற்கு விற்கப்படும் ஆல்ஃபா ரூ. 14.03 லட்சத்திற்கும், ரூ. 17.01 லட்சத்திற்கு விற்கப்படும் ஆல்ஃபா 4டபிள்யூடி 15.30 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது.

மைல்டு ஹைபிரிட் - 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் ஆட்டோமேட்டிக் (1.5L Mild Hybrid Petrol-Automatic) ஆப்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கும் ட்ரிம்களும் அதன் விலை விபரமும்: டெல்டா ரூ. 13.60 லட்சத்திற்கு வழக்கமான இந்திய குடிமக்களுக்கு விற்கப்படுகின்றது. இதே ஆப்ஷன் ராணுவ வீரர்களுக்கு ரூ. 12.42 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது. ரூ. 1.17 லட்சம் விலை வித்தியாசத்திலேயே இது ராணுவ கேன்டீனில் விற்கப்படுகின்றது.

ஜீட்டா, இது ராணுவ கேன்டீனில் ரூ. 14.09 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. ஆனால், இதை நாம் வாங்க வேண்டும் என்றால் ரூ. 15.41 லட்சம் ரூபாய் வரை எக்ஸ்-ஷோரூமுக்கே செலவிட வேண்டும். இதேபோல், ரூ. 16.91 லட்த்திற்கு நமக்கு விற்கப்படும் ஆல்ஃபா தேர்வு ராணுவ வீரர்களுக்கு ரூ. 15.42 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. ரூ. 1.48 லட்சம் வரை அவர்களுக்கு மிச்சமாகும்.

ஹைபிரிட் - 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் ஆட்டோமேட்டிக் (1.5L Mild Hybrid Petrol-Automatic) ஆப்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கும் ட்ரிம்களும் அதன் விலை விபரமும்: ஜீட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் ஆகிய தேர்வுகளே இதில் கிடைக்கின்றது. இதில் ஜீட்டா பிளஸ் ரூ. 18.43 லட்சத்திற்கும், ஆல்ஃபா பிளஸ் ரூ. 19.93 லட்சத்திற்கும் இந்தியாவில் விற்கப்படுகின்றது.

அதேவேளையில், ராணுவ கேன்டீனில் இதே ஆப்ஷன் கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ரூ. 16.49 லட்சத்திற்கும், ரூ. 17.88 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது. அதாவது, 1.93 லட்சம் ரூபாய் முதல் 2.04 லட்சம் ரூபாய் வரை குறைவான விலையில் ராணுவ வீரர்களுக்கு கிராண்ட் விற்கப்படுகின்றது.

சிஎன்ஜி தேர்வின் விலை விபரம்: டெல்டா மற்றும் ஜீட்டா ஆகிய ஆப்ஷன்களிலேயே சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. ரூ. 12.11 லட்சம் மற்றும் ரூ. 13.76 லட்சம் என்கிற விலையில் இந்த கார் மாடல் ராணுவ வீரர்களுக்கு விற்கப்படுகின்றது. அதேநேரத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையில் நமக்கு ரூ. 13.15 லட்சம் மற்றும் ரூ. 14.96 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

கிராண்ட் விட்டாராவின் இந்தியாவின் மிக சிறந்த மைலேஜ் தரும் கார் மாடல் ஆகும். இதன் ஹைபிரிட் வசதிக் கொண்ட ஆப்ஷன் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 27.97 கிமீ வரையில் மைலேஜை வழங்கும். இதன் சிஎன்ஜி ஆப்ஷன் ஒரு கிலோவிற்கு 29 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஹைபிரிட் வசதிக் கொண்ட ஆப்ஷனுக்கே இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலில் விரைவில் மாருதி அடாஸ் எனும் தொழில்நுட்பத்தை சேர்க்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 22, 2024, 16:35 [IST]
English summary
Maruti suzuki grand vitara suv car canteen stores department price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+