டாடாவுக்கு அடி கொடுக்க இதவிட்டா வேற வழியே இல்ல... கிராண்ட் விட்டாராவில் சேர்க்கப்பட இருக்கும் சூப்பரான அம்சம்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக சிறந்த கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) இருக்கின்றது. மேலும், அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் இந்த கார் மாடல் இருக்கின்றது.

அதிகம் மைலேஜை தருவதிலும் பெயர்போன கார் மாடலாக கிராண்ட் விட்டாரா உள்ளது. இந்த கார் மாடலிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் ஓர் புதிய சிறப்பு தொழில்நுட்ப வசதியைச் சேர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சிறப்பம்சங்கள் நிரம்பிய கார் மாடலாக கிராண்ட் விட்டாரா இருக்கின்றது.

Maruti grand vitara

இதிலேயே விரைவில் அடாஸ் (ADAS) எனும் அம்சத்தை மாருதி சுஸுகி விரைவில் கிராண்ட் விட்டாராவில் சேர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் என்பது மிகப் பெரிய பாதுகாப்பு வளையத்தை வழங்கும் தொழில்நுட்பம் ஆகும். இது கேமிராக்கள் மற்றும் சென்சார்கள் வாயிலாக செயல்படுகின்றது.

இந்த தொழில்நுட்பம், அவசர கால தானாக பிரேக்கைப் பிடித்தல், டிராஃபிக் சிக்னலை கண்டறிந்து அதுகுறித்து எச்சரிக்கையை வழங்குதல், காரின் குறுக்கே யாரேனும் வந்தால் அது பற்றிய எச்சரிக்கையை வழங்குதல் என ஏகப்பட்ட வசதிகளை வழங்கும். இதுதவிர, பார்க் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங் அசிஸ்ட் மற்றும் ரியர் கொலிசன் வார்னிங் ஆகியவற்றை அடாஸ் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.

இத்தகைய ஓர் தரமான அம்சத்தையே விரைவில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த அம்சத்தை கிராண்ட் விட்டாரா பெறும் எனில் மாருதி சுஸுகியின் முதல் அடாஸ் தொழில்நுட்பம் கொண்ட கார் மாடலாக அது மாறும்.

மேலும், அதிக பாதுகாப்பை வழங்கும் மாருதி சுஸுகி தயாரிப்பாகவும் கிராண்ட் விட்டாரா மாறும். இந்த ஆண்டின் இறுதிக்குள் அடாஸ் அம்சம் கொண்ட கிராண்ட் விட்டாரா விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவில் அடாஸ் அம்சத்தைச் சேர்க்கும் பணியை சென்ற ஆண்டே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவே சீக்கிரமே இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவில் ஆன்டி லாக்கிங் பிரேக்கி சிஸ்டம் (Anti-lock Braking System), இபிடி, சென்ட்ரல் லாக்கிங், இஎஸ்பி (Electronic Stability Program), ஹில் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை, ரிவர்ஸ் கேமிரா மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்களை கிராண்ட் விட்டாரா தன்னுள் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் அடாஸ்-ம் இந்த காரில் சேர்க்கப்படும் எனில் இதன் பாதுகாப்பு திறன் மிக மிக உயரிய நிலைக்கு உயரும். ஆகையால், டாடா கார்களை போலவே இதுவும் பாதுகாப்பு விஷயத்தில் நல்ல பெயரை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது கிராண்ட் விட்டாராவின் விற்பனையை இன்னும் பலமடங்கு உயர்த்த உதவியாக இருக்கும். இப்போதைய நிலவரப்படி மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ரூ. 12.57 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 23.32 லட்சம் ஆகும்.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. கிராண்ட் விட்டாரா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் சிஎன்ஜியே அதிக மைலேஜை வழங்கும். அது ஒரு கிலோவிற்கு 26.6 கிமீ வரை மைலேஜ் தரும் என மாருதி சுஸுகி உறுதி அளித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல்களில் கிராண்ட் விட்டாராவும் ஒன்றாகும். இந்த காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சிகள் பலவற்றை மாருதி சுஸுகி மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றே அதில் அடாஸ் அம்சம் சேர்க்கப்பட இருப்பது உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2024, 17:35 [IST]
English summary
Maruti suzuki grand vitara to get adas soon
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+