வருஷம் முடிய போகுது... மாருதிக்கு இருக்கும் நல்ல மனசு யாருக்கும் வராது! இலவசமா அள்ளி கொடுக்குது!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் பல கார்கள் மாதத்திற்கு 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகுகின்றன. அத்தகைய மாருதி கார்களுள் ஒன்றுதான், செலிரியோ (Celerio) ஆகும். விற்பனை சிறப்பாக இருப்பினும், அதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது புது, புது ஸ்பெஷல் எடிசன் (Special Edition) கார்களை அறிமுகம் செய்யும் மாருதி சுஸுகி நிறுவனம், அந்த வகையில் தற்போது ஒரு ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகம் செய்துள்ளது. அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
2024ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. இதனால் முடிந்தவரையில் இந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை இந்த ஆண்டிலேயே விற்று தீர்க்க எல்லா கார் நிறுவனங்களும் முயற்சிக்கின்றன. அந்த வகையில், மாருதி சுஸுகி நிறுவனமும் தனது செலிரியோ கார்களை இந்த வருடத்திற்கு உள்ளாகவே முடிந்தவரையில் விற்பனை செய்ய முயற்சிப்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை.

செலிரியோ காரின் விற்பனையை அதிகரிக்க மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரில் புதிய ஸ்பெஷல் எடிசனை இலவச ஆக்ஸஸரீகள் (Accessories) உடன் அறிமுகம் செய்துள்ளது. ரூ.4.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் செலிரியோவின் எண்ட்ரீ-லெவல் (Entry-level) வேரியண்ட்டில் இருந்து இந்த ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும்.
புதிய செலிரியோ ஸ்பெஷல் எடிசன் உடன் கிடைக்கும் இலவச ஆக்ஸஸரீகளின் மதிப்பு ரூ.11,000 ஆகும். இந்த ஸ்பெஷல் எடிசன் கார் ஆனது மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசன் செலிரியோ கார் விற்பனையில் இருக்கும் என மாருதி சுஸுகி அறிவித்துள்ளது.
இதனால், ஆக்ஸஸரீகளை ரூ.11,000 செலுத்தி வாங்குவதற்கு பதிலாக, டிசம்பர் 20க்குள் செலிரியோ காரை புக் செய்தால் அவற்றை இலவசமாக பெறலாம். இந்த ஆக்ஸஸரீகள் மூலம், செலிரியோ காரின் தோற்றத்தை இன்னும் முரட்டுத்தனமானதாகவும், காஸ்ட்லீயானதாகவும் மாற்றிக் கொள்ளலாம். ஏனெனில், இந்த ஆக்ஸஸரீகளில் காருக்கான க்ரோம் சைடு மோல்டிங் (Chrome Side Moulding) கிடைக்கும்.

அதுமட்டுமின்றி, ரூஃப் ஸ்பாய்லர் (Roof Spoiler), இரு நிறங்களில் டோர் சில் கார்ட்ஸ் (Door Sill Guards) மற்றும் கஸ்டம் ஃப்ளோர் மேட் (Custom Floor Mats)-களையும் இந்த ஆக்ஸஸரீகளில் பெறலாம். இவை தவிர்த்து, புதிய செலிரியோ ஸ்பெஷல் எடிசன் காரில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. செலிரியோவில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸை பெறலாம். இதில், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் தான் நிறைய பேர் செலிரியோ காரை வாங்க விரும்புவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மற்றப்படி, இந்த கார் டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆனால், இந்த அளவில் சிறிய மாருதி ஹேட்ச்பேக் (Hatchback) கார் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனில் கிடைக்கிறது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மற்ற பிரபலமான மாருதி கார்கள் அளவிற்கு செலிரியோ விற்பனையாகுவதில்லை. இருப்பினும், ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 10,000 செலிரியோ கார்கள் விற்பனையாகுகின்றன. அப்படியென்றால், மற்ற பிரபலமான மாருதி கார்களின் விற்பனை எந்த அளவிற்கு இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். அவற்றின் மூலமாகவே, இந்த 2024ஆம் வருடத்தில் சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி செலிரியோ காரில் தற்போது இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருபவை ஆகும். அந்த ஆக்ஸஸரீகள் அனைத்தும் பொருத்தப்பட்ட செலிரியோ காரை தான் செலிரியோ ஸ்பெஷல் எடிசன் என்கிற பெயரில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரூ.11,000 மிச்சப்படுத்த விரும்புபவர்கள் உடனடியாக செலிரியோவை புக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








