டொயோட்டா கார் என்று எத்தனை பேர் ஏமாற போறாங்களோ! பழைய கார் அடையாளம் ஒன்னு கூட இல்ல!!
டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார்களுக்கும், நம் இந்தியர்களுக்கும் இடையே ஓர் இனம் புரியாத காதல் நீண்ட வருடங்களாகவே இருந்து வருகிறது. இதனை பல இடங்களில் பல சம்பவங்களில் பார்த்துள்ளோம். அதாவது, வாங்கினால் இன்னோவா காரை தான் என அடம்பிடிப்பவர்களும் இருக்கின்றனர். டொயோட்டா இன்னோவா கார் முதல்முறையாக 2005ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், மேம்படுத்தப்பட்ட இன்னோவா கார் இன்னோவா கிரிஸ்ட்டா (Crysta) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், இன்னோவா ஹைகிராஸ் (Hycross) காரை கடந்த 2022இல் டொயோட்டா இந்தியாவில் அறிமுகம் செய்தது.
அதுவரையில் இல்லாத புதுமையாக, ஹைப்ரீட் கார் (Hybrid Car)-ஆக இன்னோவா ஹைகிராஸ் அறிமுகம் செய்யப்பட்டது. ஹைப்ரீட் கார் என்பதினாலேயே வழக்கத்தை காட்டிலும் இன்னோவா கார்களுக்கு அதிக கஸ்டமர்கள் குவிய ஆரம்பித்தனர். கடந்த நவம்பர் (November) மாதத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 867 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் இன்னோவா ஹைகிராஸின் பங்களிப்பு முக்கியமானது ஆகும்.

இவ்வாறு பலர் புதியதாக இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இங்கு ஒருவர் தனது மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) காரை டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காராக மாற்றிக் கொண்டுள்ளார். இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு (Car Modification) பஞ்சமே கிடையாது. தங்களது விருப்பத்திற்கேற்ப காரை மாற்றிக் கொள்வதை நம் நாட்டு மக்கள் மிகவும் விரும்பக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஆனால், இத்தனைக்கும் நம் நாட்டில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
காரில் தங்களது விருப்பத்திற்கேற்ப கஸ்டமர்கள் சிறு, சிறு மாற்றங்களை செய்துக் கொண்டுள்ளதை பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு கார் போன்று இன்னொரு கார் முழுமையாக மாற்றப்பட்டதை காண்பது கொஞ்சம் அரிதே ஆகும். மாருதி சுஸுகி இன்விக்டோ கார் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காராக மாற்றப்படுவது எங்களுக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறை ஆகும்.

கூட்டணியில் உள்ள டொயோட்டாவும், சுஸுகியும் இணைந்து கார்களை உருவாக்குகின்றன. அவ்வாறு, டொயோட்டாவில் களமிறக்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே மாருதி சுஸுகி இன்விக்டோ ஆகும். ஆதலால், இன்விக்டோ கார் ஒன்றை இன்னோவா ஹைகிராஸ் காராக மாற்றுவது ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல. இந்த மாடிஃபை (Modify) செய்யப்பட்ட இன்விக்டோ கார் தொடர்பான வீடியோவில், காரில் என்னென்ன மாற்றங்கள் எவ்வாறெல்லாம் கொண்டுவரப்பட்டுள்ள என்பது தெளிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
இந்த இன்விக்டோ காரின் முன்பக்கத்தில் புதிய பம்பர், கிரில், ஃபாக் விளக்குகள் மற்றும் மற்ற எலிமெண்ட்கள் அனைத்தும் இன்னோவா ஹைகிராஸில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. ஹைகிராஸில் வழங்கப்படுவதை போன்று பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளில் விளக்குகளையும் பொருத்தியுள்ளனர். அலாய் சக்கரங்கள் கூட இன்னோவா ஹைகிராஸில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த இன்விக்டோ காரின் எல்இடி ஹெட்லேம்ப்களில் கை வைக்கவில்லை.

இந்த காரை சுற்றிலும் இன்னோவா ஹைகிராஸ் காரின் முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்களை கருப்பு நிறத்திலான பேனல் ஒன்று இணைக்கிறது. காருக்குள் கதவுகளில் வழங்கப்படும் பேட்களையும் இந்த இன்விக்டோ கார் ஓனர் மாற்றிக் கொண்டுள்ளார். இவற்றை விட முக்கியமாக, காரின் ஸ்டேரிங் சக்கரத்தினுள் வழங்கப்படும் ஏர்பேக் மற்றும் ஸ்டேரிங்கின் மத்திய பகுதியில் வழங்கப்படும் லோகோ மாற்றப்பட்டுள்ளது.
இருக்கைகள் இன்னும் சவுகரியமானதாக ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதுடன், இருக்கைகளில் கூடுதல் குஷின்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, சோனி சவுண்ட் சிஸ்டமும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து, காரின் என்ஜின் சிஸ்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்திருக்க வாய்ப்பில்லை. மாருதி இன்விக்டோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.25.05 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், மாருதி சுஸுகி இன்விக்டோ கார் ஒன்று இவ்வாறு டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் போன்று மாற்றப்பட்டிருப்பது நாங்கள் பார்த்தவரையில் இதுவே முதல்முறை ஆகும். இவ்வாறு காரின் மாடிஃபிகேஷன்களை செய்வதற்கு முன் அருகில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் முறையாக தகவல் தெரிவிப்பது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications









