இந்த காருக்கு ரூ1.5 லட்சம் தள்ளுபடி! ஆனா வாங்க ஆளே இல்லை! ஏன் தெரியுமா?
மாருதி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அந்நிறுவனத்தில் விற்பனையாகும் ஒவ்வொரு கார்களின் விற்பனை குறித்த விபரங்களும் நமக்கு கிடைத்துள்ளன. அதன்படி ஆஃப் ரோடு எஸ்யூவி காரான ஜிம்மி காரின் விற்பனை நம்மை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் குறைவாக இருக்கிறது. இந்த காரின் விற்பனை குறைவிற்கான காரணம் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் மாருதி சுஸூகி நிறுவனம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்ற விரிவான விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மாருதி ஜிம்னி காரின் விற்பனை மிக மோசமான அளவு குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டுமல்லாமல் 2023 டிசம்பர் மாதம் முதல் இந்த காரை ஒவ்வொரு மாதமும் 1000 பேர் கூட வாங்கவில்லை. ஒவ்வொரு மாதமும் இதன் விற்பனை சரிவை சந்தித்துக் கொண்டே வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 257 பேர் மட்டுமே இந்த காரை வாங்கி உள்ளார்கள். இந்திய மார்க்கெட்டில் மாருதி ஜிம்னி கார் நேரடியாக மஹிந்திரா நிறுவனத்தின் தார் காருக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரைப் பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் 60 கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆறு மாதமாக ஜிம்னி காரின் விற்பனை சரிவை செய்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 1,020 கார்களையும், கடந்த டிசம்பர் மாதம் 730 கார்களையும் ,கடந்த ஜனவரி மாதம் 163 கார்களையும், கடந்த பிப்ரவரியில் 322 கார்களையும், மார்ச் மாதம் 318 கார்களையும், விற்பனை செய்துள்ளது கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 257 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மூன்று மாத சராசரி விற்பனையை பார்க்கும் போது மொத்தம் 265 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

இந்த விற்பனை சரிவை பார்க்கும்போது நமக்கு மாருதி ஜிம்னி காரை வாங்க மக்கள் மத்தியில் மவுசு குறைந்து கொண்டே இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் இந்த காரின் விற்பனை அதிகரிக்க மாருதி நிறுவனம் ரூபாய் 1.5 லட்சம் வரையில் தள்ளுபடிகளை இந்த மாதம் வழங்கி உள்ளது. இதனால் இந்த காரின் விற்பனை அதிகமாகும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.
மாருதி நிறுவனத்தின் ஜிம்னி காரை பொருத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே 15 பி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 15 எச்பி பவரையும், 134 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

இந்த காரில் முக்கியமாக எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம் முன்பக்கமும் பின்பக்கமும் வைப்பர் மற்றும் வாஷர்கள், டே மற்றும் நைட் ஐஆர்விஎம், டிரைவர் சைடு பவர் விண்டோ, ரெக்லைன் செய்யக்கூடிய முன்பக்க சீட்டுகள், மல்டி ஃபங்ஷன் ஸ்டேரிங் வீல், டிஎஃப்டி கலர் டிஸ்ப்ளே, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் சீட்டுகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட் ரெஸ்ட்டுகள், முன்பக்கமும் பின்பக்கமும் காரை டோ செய்து எடுத்துக் கொள்ளக்கூடிய ஹூக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தக் காரில் ஸ்டீல் வீல்கள், டிராப் ரெயில், 7 இன்ச் கொண்ட ஸ்மார்ட் ப்ரோ டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, ஆல்ஃபா கிரேட் அலாய் வீல்கள், பாடி கலர் டோர் ஹேண்டில், எல்இடி ஹெட் லைட்டுகள் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதுபோக முன் பக்கம் பச்சை நிற கண்ணாடி புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், லெதர் ஸ்டேரிங் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 9 இன்ச் கொண்ட ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆர்கேமி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் பக்கவாட்டில் ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. லிமிடெட் மற்றும் ஸ்லீப் டிஃப்ரன்ஷியல் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோக்ராம், ஹில்ஹோல்டு ஹில் டிசன்ட் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சைடு இம்பேக்ட் டோர் பீம் இன்ஜின், இம்மொபிலைசர் மற்றும் 3பாயிண்ட் எமர்ஜென்சி லாகின் ரியாக்டர் சீட் பெல்ட் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி ஜிம்னி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் ஆகும்போது மிகப்பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்ட காராக இருந்தது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்குவார்கள் என கூறப்பட்டது. இருந்தாலும் இது ஆஃப்ரோடு எஸ்யூவி கார் என்பதால் இதன் ரசிகர்கள் மிக குறைவாகவே இருப்பார்கள் எனவும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த காரின் விற்பனை சுமார் ஓர் ஆண்டுக்குப் பிறகு வெகுவாக குறைந்துள்ளது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications









