எக்ஸ்ட்ரா 7 லட்ச ரூபாய் செலவு... இந்தியாவில் எங்கு தேடினாலும் இப்படியொரு ஜிம்னியை பார்க்க முடியாது!
மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) வாகனம் ஒன்று அதிகப்பட்சமாக 130 பிஎச்பி இயக்க ஆற்றலில் இயங்கக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, வாகனத்தின் என்ஜின் அந்த அளவிற்கு மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஜிம்னி வாகானத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு காலத்தில் மாருதி சுஸுகி ஜிப்ஸி வாகனத்தை நிறைய பேர் வாங்கினர். போலீஸ் வாகனம் என்றாலே ஜிப்ஸி தான் என்கிற அளவிற்கு இந்த மாருதி வாகனத்தின் விற்பனை சிறப்பாக இருந்தது. எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்லலாம் என்பதுதான் ஜிப்ஸியின் முக்கியமான ஹைலைட்டாக இருந்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் ஜிப்ஸியின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுத்தியது. ஜிப்ஸியின் இடத்தில் தற்சமயம் ஜிம்னி விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஜப்பானில் விற்பனையில் இருந்த ஜிம்னி என்கிற ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
கடந்த சில மாதங்களாக ஜிம்னி வாகனத்தின் விற்பனை பெரிய அளவில் இல்லையென்றாலும், மாடிஃபை செய்வதற்காகவே ஜிம்னி வாகனத்தை சிலர் வாங்குகின்றனர். அவ்வாறு, ஜிம்னி வாகனத்தை வாங்கிய ஒருவர் சூப்பர் சார்ஜர் கிட்டை பொருத்தி, தனது ஜிம்னியை ஆற்றல்மிக்கதாக மாற்றியுள்ளார். இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஜிம்னியில் அதிகப்பட்சமாக 130 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

ஆனால், மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்தில் வழக்கமாக 104 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை மட்டுமே பெற முடிகிறது. இந்த வாகனத்திற்கான சூப்பர்சார்ஜர் கிட் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூப்பர்சார்ஜர் கிட்டை புல்லட் சூப்பர்சார்ஜிங் என்கிற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த ஜிம்னி வாகனத்தில் கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான அப்டேட் என்று பார்த்தால், அது சூப்பர்சார்ஜர் கிட் பொருத்தப்பட்டு இருப்பதுதான். ஆனால் அதேநேரம், வாகனத்தில் வேறு சில மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஜிம்னி வாகனத்தின் முன்பக்கத்தில் அலுமினியத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிராண்ட்-நியூ பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பம்பரும் வாகனத்தின் செயல்படுதிறனில் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

அதேபோல், வாகனத்தின் முன்பக்க கிரில்லையும் மாற்றியுள்ளனர். சுஸுகி நிறுவனத்துக்கே உண்டான கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் முன்பக்கமாக இருந்து பார்க்கையில், இந்த ஜிம்னி வாகனம் முற்றிலுமாக வித்தியாசமாக தெரிகிறது. மேலும், புதிய பவர்ஃபுல்லான ஃபாக் விளக்குகளையும் இந்த வாகனம் பெற்றுள்ளது. கூடுதல் பிரகாசத்திற்காக கூடுதல் விளக்குகளையும் பொருத்தியுள்ளனர்.
இவற்றுடன், மெத்தட் ரேசிங் சக்கரங்களும் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, இந்த ஜிம்னியில் சஸ்பென்ஷனும் மாற்றப்பட்டுள்ளது. கருப்பு நிறத்திலான ஆல்பா ரெசென் ரூஃப் ராக் இந்த ஜிம்னி வாகனத்தின் மேலே பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் பின்பக்கத்தில், ட்வின் எக்ஸாஸ்ட் குழாய் உடன் சேர்த்து பம்பரும் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஜிம்னி வாகனத்தின் உட்பக்கத்திலும் நிறைய மாற்றங்களை செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தமாக இந்த ஜிம்னியில் செலவழிக்கப்பட்டுள்ள தொகை ரூ.7 லட்சம் என தெரிவித்துள்ளனர். இவ்வளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதினால்தான், ரூ.7 லட்சம் வரையில் செலவாகியுள்ளது. இந்தியாவில் சூப்பர் சார்ஜர் கிட்டை கொண்ட ஜிம்னி வாகனத்தை இதுவரையில் பார்த்ததில்லை. ஆகையால், இதுதான் இந்தியாவின் முதல் சூப்பர்சார்ஜ்டு மாருதி சுஸுகி ஜிம்னியாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









