ரூ.4.99 லட்சத்திற்கு ஸ்பெஷல் எடிசன் காரா! அதானே பாத்தோம்.. கொஞ்சம் நாளைக்கு மட்டும்தான் விற்பனைக்கு கிடைக்கும்
மாருதி சுஸுகி நிறுவனம் அதன் மூன்று முக்கியமான ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அந்த சிறப்பு பதிப்பு கார் மாடல்களை இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆல்டோ கே10 (Alto K10), எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) மற்றும் செலிரியோ (Celerio) ஆகிய மூன்று கார் மாடல்களிலேயே சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
டிரீம் சீரிஸ் (Dream Series) எனும் லிமிடெட் எடிசனையே அது இந்த மாடல்களிலும் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பு குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. ஆனால், எவ்வளவு நாட்கள் விற்பனையில் இருக்கும்? எத்தனை யூனிட்டுகள் வரை விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது? என்பது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

மூன்று மாடல்களுமே ரூ. 4.99 லட்சம் என்கிற விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். இந்த சிறப்பு அந்தந்த கார் மாடல்களின் உயர் நிலை வேரியண்டையே அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. உதாரணமாக ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ பிளஸ் (Alto K10 VXI+) வேரியண்டை தழுவியே இந்த கார் மாடலுக்கான டிரீம் சீரிஸ் சிறப்பு பதிப்பு தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
இதேபோல், எஸ்-பிரஸ்ஸோவின் விஎக்ஸ்ஐ (S-Presso VXI) வேரியண்டும், செலிரியோவின் எல்எக்ஸ்ஐ (Celerio LXI) வேரியண்டுமே டிரீம் சீரிஸ்க்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. டிரீம் சீரிஸில் சற்று கூடுதல் அம்சங்களை மாருதி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஆல்டோ கே10 டிரீம் சீரிஸில், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, செக்யூரிட்டி சிஸ்டம் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும்.
அதேவேளையில், மிக அதிக அம்சங்களாக எஸ்-பிரஸ்ஸோவின் டிரீம் சீரிஸ்-இல் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, செக்யூரிட்டி கேமிரா, 1 ஜோடி ஸ்பீக்கர், காரின் உட்பக்கத்தை அழகாக்கும் கிட், வீல் ஆர்ச் கிளாடிங், சைடு ஸ்கிட் பிளேட், ரியர் ஸ்கிட் பிளேட், முன் பக்கத்திற்கான குரோம் கிரில், பின் பக்க கதவுக்கான குரோம் அலங்கார அணிகலன் மற்றும் நம்பர் பிளேட் ஃப்ரேம் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றது.
செலிரியோ டிரீம் சீரிஸில் பயனியர் மல்டி மீடியா ஸ்டீரியோ, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் 1 ஜோடி ஸ்பீக்கர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும். அட்வான்ஸ்டு அம்சங்கள் கொண்ட கார்களின் உரிமையாளர்களை அதிகப்படுத்தும் நோக்கிலேயே இந்த டிரீம் சீரிஸை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக மாருதி சுஸுகி தெரிவித்து இருக்கின்றது.
அதாவது, அதிக தொழில்நுட்ப அம்சங்களின் வாயிலாக தன்னுடைய ஆரம்ப நிலை வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சியில் மாருதி சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. சமீபத்திலேயே தன்னுடைய ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் அந்த கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடல்கள் சிலவற்றின் விலையைக் குறைத்தது.
ஆல்டோ கே10 (Alto K10), எஸ்-பிரஸ்ஸோ (S-Presso), செலிரியோ (Celerio), வேகன்-ஆர் (Wagon-R), ஸ்விஃப்ட் (Swift), டிசையர் (Dzire), பலினோ (Baleno), ஃப்ரான்க்ஸ் (Fronx) மற்றும் இக்னிஸ் (Ignis) ஆகிய கார் மாடல்களில் வழங்கப்படும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் தேர்வுகளின் விலையையே மாருதி சுஸுகி குறைத்தது. ரூ. 5 ஆயிரம் வரை விலைக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விலைக் குறைப்பிற்கும் விற்பனையை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே காரணமாக உள்ளது. இதன் வாயிலாக மாருதி சுஸுகி விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் பலதரப்பட்ட முயற்சிகளை நாட்டில் மேற்கொண்டு வருவது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், அடுத்தடுத்து வரும் நாட்களில் மாருதி கார்களின் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








