35 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் விலை இவ்ளோதானா! பைக், ஸ்கூட்டர் கம்பெனிகளை எல்லாம் இழுத்து மூட போறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் எஸ்யூவி ரக கார்களை (SUV Cars) அதிகமாக விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக குறைவான விலையில் கிடைக்கும் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களுக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சமீப காலமாக மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்து வருகிறது.

டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இவை இரண்டும்தான் இந்தியாவின் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்ட்டில் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள கார்கள் ஆகும். இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் கண்களை உறுத்த தொடங்கியுள்ளது.

Maruti Future-S Concept

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு எஸ்யூவி ரக கார்கள் மிக முக்கியமான காரணமாக உள்ளன. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இந்த வரிசையில் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்ட்டில், புத்தம் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் ஒய்43 (Y43) என்ற குறியீட்டு பெயரில் இந்த கார் அழைக்கப்பட்டு வருகிறது.

Maruti Future-S Concept Rear View

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.10 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மறுபக்கம் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலையும் வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.15 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி ரக கார், இதை காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக இதன் ஆரம்ப விலை வெறும் 5 அல்லது 5.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது. எனவே டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய 2 கார்களுக்கும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி கார் விற்பனையில் கடுமையான சவாலை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி காரில், 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய 2 முக்கியமான போட்டி மாடல்களிலும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மறுபக்கம் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 27.1 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 30-35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கலாம்.

அத்துடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் பாதுகாப்பிற்கு 6 ஏர் பேக்குகள் போன்ற வசதிகளும் (Features) வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி கார் வரும் 2025ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 2, 2024, 14:05 [IST]
English summary
Maruti suzuki micro suv india launch details expected price mileage
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+