அப்படி என்னதான் இருக்கோ மாருதியோட இந்த ஷோரூம்ல.. இந்தியர்கள் கூட்டம் கூட்டமா டூருக்கு போற மாதிரி குவியுறாங்க!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் தயாரிப்புகளை இரு வெவ்வேறு விதமான ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. அரேனா (Arena) மற்றும் நெக்ஸா (Nexa) ஆகியவையே அவை ஆகும். இந்த இரண்டில் நெக்ஸா ஷோரூமே விற்பனையில் ஓர் வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஷோரூம்கள் வாயிலாக மட்டுமே இதுவரை 25 லட்சம் யூனிட்டு வாகனங்களை அது விற்பனைச் செய்திருப்பதாகவே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த மாபெரும் விற்பனை எண்ணிக்கையை அந்நிறுவனம் வெறும் 8 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களில் எட்டியது என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி நெக்ஸா ஷோரூமை 2015 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஷோரூம்கள் வாயிலாக தன்னுடைய பிரீமியம் தர வாகன மாடல்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Maruti nexa showroom

பிரீமியம் தயாரிப்பு என்றாலே சற்று அதிகம் விலைக் கொண்டதாகதான் இருக்கும் என்பதை நாம் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதேவேளையில், இத்தகைய தயாரிப்பையே இந்தியர்கள் வாங்கி குவித்துக் கொண்டு இருக்கின்றனர் என்பது தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் வாயிலாக நமக்கு தெரிய வந்திருக்கின்றது.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (Society of Indian Automotive Manufacturers) வெளியிட்டு இருக்கும் தகவலின்படி மார்ச் 2024 நிலவரப்படி மாருதி சுஸுகி நிறுவனம் நாடு முழுவதும் உள்ள நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக மட்டும் 25.8 லட்சம் யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.

அதேவேளையில், மே மாத நிலவரப்படி இது 26.7 லட்சம் யூனிட்டுகளாக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. அதவாது, மே மாதத்தில் மட்டும் நெக்ஸா ஷோரூம் வாயிலாக 1 லட்சம் யூனிட்டுகள் வரை மாருதி கார்கள் விற்பனைச் செய்யப்பட்டு இருக்கின்றன. மாருதி சுஸுகி நெக்ஸா ஷோரூம் நெட்வோர்க் வாயிலாக எட்டு கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இக்னிஸ் (Ignis), பலினோ (Baleno), கிராண்ட் விட்டாரா (Grand Vitara), சியாஸ் (Ciaz), ஜிம்னி (Jimny), ஃப்ரான்க்ஸ் (Fronx), இன்விக்டோ (Invicto) மற்றும் எக்ஸ்எல் (XL6) ஆகியவையே அவை ஆகும். இந்த அனைத்து மாடல்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

அதேவேளையில், பலினோவிற்கு மிக மிக பெரிய அளவில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 26.7 லட்சம் கார்கள் விற்பனையில் முதல் இடத்தில் பலினோவே உள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒட்டுமொத்த விற்பனையில் 14.5 லட்சம் யூனிட்டுகள் பலினோ என கூறப்படுகின்றது.

இது ஒட்டுமொத்த விற்பனையில் 56 சதவீதம் என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் ரக கார் மாடலாக பலினோ இருக்கின்றது. அதேவேளையில், மற்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களைக் காட்டிலும் இதன் விலை சற்று குறைவாகவே உள்ளது. இதன் விளைவாகவே இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு அடுத்தபடியாக இக்னிஸ் உள்ளது. ஒட்டுமொத்த விற்பனையில் 11 சதவீதத்தை இந்த கார் மாடலே கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அதாவது, மூன்றாவது இடத்தில் சியாஸ் இருக்கின்றது. இது ஒட்டுமொத்த விற்பனையில் 7 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியான இடத்தில் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகள் இருக்கின்றன.

இந்தியாவில் பலினோ ஹேட்ச்பேக் ரூ. 8.43 லட்சம் தொடங்கி 9.33 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. பலினோ தற்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி என இரண்டு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலினோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.35 கிமீ முதல் 22.94 கிமீ வரையில் மைலேஜ் தரும். அதேவேளையில், இதன் சிஎன்ஜி தேர்வு கிலோ ஒன்றிற்கே 30.61 கிமீ வரையில் தரும். இத்தகைய அதிக மைலேஜ் தரும் திறனும் இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்துக் கொண்டிருக்க காரணமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2024, 14:56 [IST]
English summary
Maruti suzuki nexa reaches 25 lakh sales milestone with in 8 years 6 months
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+