நல்ல மைலேஜ் தரும் கார்களினால் மாருதி சுஸுக்கு கை மேல் பலன்... மக்கள் விரும்பி தேர்வு செய்யும் கார் பிராண்ட்ஸ்!
புதியதாக கார் வாங்க வேண்டும் என்பது நம் எல்லாருக்கும் நிச்சயமாக விருப்பமாக இருக்கும். இந்த கனவை நினைவாக்கி வருபவர்களின் எண்ணிக்கை நம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் மாதத்திற்கு மாதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நடந்து முடிந்த 2024 ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த டாப்-10 கார் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி, இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம். இதனை மீண்டும் கடந்த ஜூலை மாதத்தில் மாருதி சுஸுகி நிரூபித்துள்ளது. கடந்த 2024 ஜூலை மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 37,463 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்து இருப்பினும், உண்மையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலையில் இதனை காட்டிலும் 14,663 கார்கள் அதிகமாக 1 லட்சத்து 52,126 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 43,026 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மாருதி சுஸுகி கார்களின் பங்களிப்பு மட்டும் சுமார் 40.07% ஆகும். அதாவது, இந்தியாவில் கார் வாங்கும் 2- 3 பேர்களில் ஒருவர் நிச்சயமாக மாருதி சுஸுகியின் காரை வாங்குகிறார். மாருதி சுஸுகிக்கு அடுத்து, கடந்த ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக 2வது இடத்தில் இருப்பது ஹூண்டாய் ஆகும்.
கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 49,013 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2023 ஜூலை மாதத்தில் ஹூண்டாய் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 50 ஆயிரத்தை கடந்திருந்தது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 50,701 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. 49,013 ஹூண்டாய் கார்கள் விற்பனை என்பது மாருதி சுஸுகி விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையில் பாதி கூட கிடையாது.

இதில் இருந்து இந்திய கார்கள் மார்க்கெட்டில் மாருதி சுஸுகி எந்த அளவிற்கு ஆதிக்கம் கொண்டுள்ளது என்பதை அறியலாம். ஹூண்டாய்க்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தை பிடித்திருக்கும் கார் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் ஆகும். கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 44,727 டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஜூலை மாதத்தில் 47,630 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.
4வது இடத்தில் மஹிந்திரா 41,623 கார்களின் விற்பனை உடன் உள்ளது. மே மாதத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் அறிமுகத்திற்கு பிறகு, மஹிந்திரா கார்களின் விற்பனை ஆனது கடந்த சில மாதங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. 2023 ஜூலை மாதத்தில் வெறும் 36,205 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து 5வது இடத்தை டொயோட்டா பிடித்துள்ளது.

டொயோட்டாவில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 29,533 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஜூலையில் 20,759 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், கடந்த மாதத்தில் 8,774 கார்களை டொயோட்டா அதிகம் விற்பனை செய்துள்ளது. 2023 ஜூலையை காட்டிலும் 2024 ஜூலையில் கூடுதலாக அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனமாக டொயோட்டா விளங்குகிறது.
இந்த வரிசையில் 6வது இடத்தில் உள்ள கியா நிறுவனம் கடந்த மாதத்தில் 20,507 கார்களை விற்பனை செய்துள்ளது. இதற்கடுத்து 7வது மற்றும் 8வது இடங்களில் ஹோண்டா மற்றும் எம்ஜி மோட்டார் உள்ளன. இவற்றின் கடந்த ஜூலை மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 4,624 மற்றும் 4,572 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 2 இடங்களில் ஃபோக்ஸ்வேகன் (3,407) மற்றும் ரெனால்ட் (2,832) உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா, டொயோட்டா மற்றும் கியா நிறுவனங்களை தவிர்த்து மற்றவை அனைத்தின் கார் விற்பனை 2023 ஜூலையை காட்டிலும் குறைந்துள்ளது. இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் 2வது இடத்திற்கு ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக பலத்த போட்டி நீடித்து வருகிறது. ஆனால், இதில் பெரும்பாலும் ஹூண்டாயின் கையே ஓங்கி உள்ளது. கடந்த 2024 ஜூலை மாதத்திலும் அந்த நிலையே தொடர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications









