சர்வீஸ் சென்டர்களை திறப்பதில் கெத்து காட்டும் மாருதி.. வீட்ட விட்டு வெளிய வந்தாலே சர்வீஸுக்கு விட்டுடலாம்போல!

பொதுவாகன வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளை விற்கவே அதிகம் தீவிரம் காட்டுவார்கள். இதனால்தான் சில வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஷோரூம்கள் தெருவுக்கு தெரு இருக்கின்றன. ஆனால், சர்வீஸ் என வரும்போது எங்கோ ஒரு மூலைக்கு ஒரு சர்வீஸ் மையத்தை மட்டுமே வைத்திருப்பார்கள் அல்லது சர்வீஸ் செய்ய காரை முக்கிய நகரங்களுக்கு எடுத்து வர வேண்டிய சூழல் இருக்கும். சொல்லப்போனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் சில, இரண்டு- மூன்று ஊர்களுக்கு ஒரு சர்வீஸ் மையம் அல்லது ஒரு மாவட்டத்திற்கே ஒரு சர்வீஸ் மையம் என்று வைத்துக் கொண்டே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான நிறுவனங்களுக்கு மத்தியில் மாருதி சுஸுகி நிறுவனம் சர்வீஸ் மையங்களை திறப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய 5 ஆயிரமாவது புதிய சர்வீஸ் மையத்தை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது நாட்டில் திறந்திருக்கின்றது. குருகிராமிலேயே இந்த ஐந்தாயிரமாவது சர்வீஸ் மையம் திறக்கப்பட்டு உள்ளது.

Maruti service centre

இந்த செயலின் வாயிலாக விற்பனையகங்களை திறப்பதில் மட்டுமல்ல சர்வீஸ் மையங்களை திறப்பதிலும் மிகுந்த ஆர்வத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுமாதிரியான செயல்பாட்டின் காரணத்தினாலேயே இந்தியாவின் நம்பர் 1 கார் விற்பனையாளராக மாருதி சுஸுகி இருக்கின்றது.

காரை வாங்கிய பின்னர் அதை சர்வீஸ் செய்வதில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்கும் பொருட்டே மாருதி சுஸுகி நிர்வாகம் பரந்த அளவில் சர்வீஸ் மையங்களை திறந்துக் கொண்டிருக்கின்றது. தொந்தரவு மற்றும் தடையற்ற பயன்பாட்டை மாருதி சுஸுகி வாடிக்கையாளர்கள் பெறவும் இது உதவியாக இருக்கின்றது.

தற்போது நிறுவனத்தின் சர்வீஸ் மையங்கள் 2,500க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் அதன் முதல் சர்வீஸ் மையத்தை 1983 ஆம் ஆண்டிலேயே நாட்டில் தொடங்கியது. சுமார் 41 ஆண்டுகளில் இந்த நிறுவனம் 5000 சர்வீஸ் மையங்களை திறந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை நாட்டில் கட்டி எழுப்பி இருக்கின்றது.

2023-24 ஆம் நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனம் 2.5 கோடி கார்களை மாருதி சுஸுகி நிர்வாகம் சர்வீஸ் செய்திருக்கின்றது. இதன் வாயிலாக கார் விற்பனையில் மட்டுமல்ல அந்த கார்களை சர்வீஸ் செய்வதிலும் நல்ல வருமானத்தையும், மிக சிறப்பாக அது செயல்பட்டு வருவதும் தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, இந்த நிதியாண்டில் 400 சர்வீஸ் டச் பாயிண்டுகளை அது புதிதாக பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

மாருதி சுஸுகி நிறுவனம் இத்தகைய வலையமைப்பைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே விற்பனையில் அது சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் மாருதி சுஸுகியின் தயாரிப்புகள் மிகக் குறைவான விலையிலும், அதிக மைலேஜ் தரக் கூடியவையாகவும் மற்றும் மிக மிக குறைவான பராமரிப்புச் செலவையும் வழங்கக் கூடியவையாக இருக்கின்றன.

இதன் காரணத்தினாலேயே இந்தியர்களின் மனம் கவர்ந்த வாகன உற்பத்தியாளராக மாருதி சுஸுகி இருக்கின்றது. இதுதவிர, மாருதி சுஸுகியின் தயாரிப்புகளை எளிதில் நுகர முடியும். ஆமாங்க, பெரும் நகரங்களை மட்டுமே குறி வைக்காமல் இரண்டாம் நிலை நகரம், சில வளர்ந்த கிராமப்புறங்களிலும் மாருதி சுஸுகி விற்பனை மையம் மற்றும் சர்வீஸ் மையங்களை உருவாக்கி இருக்கின்றது.

இதன் விளைவாக இந்தியர்களின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாகவும் மாருதி சுஸுகி மாறி இருக்கின்றது. இந்த நம்பிக்கையை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே புதிய ஷோரூம் மற்றும் சர்வீஸ் மையங்களை திறப்பதில் மிக தீவிரமாக மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் நாட்களிலும் இதுபோன்று இன்னும் பல சாதனைகளை மாருதி சுஸுகி வாகன விற்பனை, சர்வீஸ் மையங்கள் திறப்பு மற்றும் ஷோரூம் திறப்பு உள்ளிட்டவற்றில் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் இப்போதைய இந்தியாவிற்கான கம்மிட்மெண்டை வைத்து பார்க்கையில் இன்னும் பல ஆண்டுகளுக்கு இதுவே நாட்டின் நம்பர் 1 கார் விற்பனையாளர் எனும் அந்தஸ்தைக் கொண்டிருக்கும் என தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2024, 11:57 [IST]
English summary
Maruti suzuki opens 5000th service center in india
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+