மைலேஜ் தருவதில் மட்டுமல்ல அழகிலும் அசத்தலா இருக்கு.. ஸ்விஃப்ட்க்கு பதிலா எல்லாரும் இந்த காரைதான் வாங்க போறாங்க
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புதிய தலைமுறை டிசையர் (New Gen Dzire) கார் மாடலை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்ய இருப்பதை முன்னிட்டே இந்த வெளியீட்டு சம்பவத்தை மாருதி சுஸுகி செய்திருக்கின்றது. இந்தியர்களின் எதிர்பார்ப்பை மிகப் பெரிய அளவில் கவர்ந்திருக்கும் கார் மாடல்களில் இந்த புதிய தலைமுறை டிசையர்-ம் ஒன்றாகும். இந்தியாவில் கேப் பயன்பாட்டாளர்கள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டாளர்கள் என இரு பிரிவினர்களின் தேவையையும் டிசையர் பூர்த்தி செய்து வருகின்று.
புதிய தலைமுறை டிசையர்-ம் இதேபோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாகனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹூண்டாய் அவுரா (Hyundai Aura), டாடா டிகோர் (Tata Tigor ) மற்றும் ஹோண்டா அமேஸ் (Honda Amaze) ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

இதில், ஹோண்டா அமேஸ்-ம் புதிய தலைமுறை வாகனமாக சந்தையைக் களம் காண இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே தனது புதிய டிசையர் கார் மாடலுக்கான புக்கிங்குகளை ஏற்கும் பணிகளைத் தொடங்கிவிட்டது. ரூ. 11 ஆயிரம் முன் தொகையிலேயே இந்த காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. நவம்பர் 11 அன்றே இந்த கார் மாடலின் விலையை மாருதி சுஸுகி அறிவிக்க இருக்கின்றது. ரூ. 7 லட்சம் என்கிற தொடக்க விலையில் இருந்தே இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தொடர்ந்து, முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு புதிய அம்சங்களை இந்த காரில் மாருதி சுஸுகி சேர்த்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், புதிதாக புதிய பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் வசதி, 9 அங்குல அளவிலான பெரிய தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தெரிய வந்திருக்கின்றது.
இதுதவிர, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களையும் புதிய தலைமுறை டிசையர் பெற்றிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுதவிர, காரின் பிரீமியம் லுக்கை அதிகரிக்கச் செய்கின்ற விதமான அம்சங்களையும் இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், டூயல் டோன்கள் கொண்ட இருக்கைகள் மற்றும் புதிய மூன்று ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவற்றையே அது பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியை டிசையர் பெறும் எனில், இந்தியாவின் முதல் சன்ரூஃப் அம்சத்தைப் பெற்ற சப்-4 மீட்டர் செடான் ரக காராக டிசையர் மாறும்.
இந்த சிறப்பு அந்த காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என நம்பப்படுகின்றது. இதற்கேற்ப புதிய டிசையரின் வெளிப்பக்க தோற்றமும் அமைந்திருக்கின்றது. மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட வாகனமாகவே புதிய டிசையர் தயாராகி இருக்கின்றது. இதன் ஹெட்லைட் செட்-அப், கிரில், பான்னெட் என அனைத்தும் புதிய உருவ மாற்றத்திற்கு ஆளாகி இருக்கின்றன.
எனவே இது சாலையில் தோன்றும்போது டிசையர் என்பதற்கு பதிலாக வேறு ஏதோ புதிய கார் மார்க்கெட்டிற்கு வந்திருக்கோ என நினைக்கச் செய்யும். அத்தகைய தோற்றத்தையே புதிய டிசையர் தாங்கி இருக்கின்றது. இந்த காரில் எல்இடி ஹெட்லேம்ப், கவர்ச்சியான அலாய் வீல்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகளே வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த காருக்கு புதிய தோற்றத்தை வழங்கும் விதமாக இதன் டெயில் லைட்டில் முக்கோன வடிவிலான இன்செர்ட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினும் இந்த காரில் புதிய ஒன்றே பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. 1.2 லிட்டர், இசட் சீரிஸ், 3 சிலிண்டர் எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இது 24 கிமீ முதல் 33 கிமீ வரையில் மைலேஜ் தரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் புதிய தலைமுறை டிசையர் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், விற்பனையில் இதுவும் புதிய புதிய சாதனைகளைப் படைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








