33 கிமீ மைலேஜை வாரி வழங்கற காரோட விலை இவ்ளோதானா! பைக் வாங்கற பிளானை அப்படியே விட்டுட்டு இதை வாங்கிடலாம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso). இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 2,607 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 2,491 ஆக மட்டுமே இருந்தது. இது 5 சதவீத வளர்ச்சி ஆகும்.
இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப விலை வெறும் 4.26 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை வெறும் 6.11 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 67 பிஎஸ் பவர் மற்றும் 89 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில், சிஎன்ஜி இன்ஜின் (CNG Engine) ஆப்ஷனும் கூட கொடுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியண்ட்களிலும் (Variants) இதே 1.0 லிட்டர் இன்ஜின்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் 57 பிஎஸ் பவர் மற்றும் 82 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கும். அதேபோல் சிஎன்ஜி இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பவர் அவுட்புட் குறைவு, ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை என்றாலும் கூட, சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜை (Mileage) வழங்கும்.
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி கூறியுள்ளது. ஆனால் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.12 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.30 கிலோ மீட்டர் மைலேஜையும் மட்டுமே வழங்கும்.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்களில் 24.12 கிலோ மீட்டர் மைலேஜ் என்பது, Std மற்றும் LXi வேரியண்ட்களில் கிடைக்க கூடிய மைலேஜ் ஆகும். ஆனால் VXi மற்றும் VXi+ ஆகிய 2 பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்களும் ஒரு லிட்டருக்கு 24.76 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிஎன்ஜி உடன் ஒப்பிடும்போது, இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் மைலேஜ் குறைவுதான். ஆனால் பொதுவாக பார்த்தால், அதுவே நல்ல மைலேஜ்தான் என்பதில் துளியும் மாற்று கருத்து இல்லை. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோவை பரிசீலனை செய்யலாம்.
குறிப்பாக புதிதாக கார் ஓட்டி பழகியவர்கள் மற்றும் முதல் முறையாக கார் வாங்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ ஏற்றதாக இருக்கும். இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் (Renault Kwid) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக, மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ உள்ளது.


Click it and Unblock the Notifications








