வெறும் 4 லட்சத்துக்கு 33 கிமீ மைலேஜ் தர்ற காரா! ஷோரூம் வாசல்ல நின்னு கூவி கூவி விக்கற அளவுக்கு ஆயிருச்சு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ (Maruti Suzuki S-Presso). இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 2,139 எஸ்-பிரஸ்ஸோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், 3,368 ஆக இருந்தது. இது 36 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் சமீப காலமாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு சில விலை குறைவான கார்கள், விற்பனையில் 'டல்' அடித்து கொண்டுள்ளன. இதில், மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோவும் ஒன்றாகும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் மந்தமான விற்பனை, நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதமும் தொடர்ந்துள்ளது.

Maruti S-Presso Side Design

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப விலை வெறும் 4.26 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை வெறும் 6.11 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ காரில், 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஎஸ் பவர் மற்றும் 89 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Maruti Suzuki S-Presso

மறுபக்கம் சிஎன்ஜி இன்ஜின் அதிகபட்சமாக 57 பிஎஸ் பவர் மற்றும் 82 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.

இருப்பதிலேயே அதிகபட்சமாக மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.12 கிலோ மீட்டர் முதல் 25.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் ஏர்பேக்குகள் உள்பட பல்வேறு வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் சமீப காலமாக விலை குறைவான சிறிய கார்களின் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு பதிலாக சற்று விலை உயர்ந்த கார்களை வாங்கும் 'டிரெண்ட்' வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இது மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 14, 2024, 17:50 [IST]
English summary
Maruti suzuki s presso sales report october 2024 36 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+