புதுசா இன்னும் எத்தனை மாருதி கார்கள் வந்தாலும் இதன் இடத்தை நிரப்புறது கஷ்டம்!! கஸ்டமர்கள் குவியுறாங்க!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவி ரக கார்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், இதற்கிடையில் ஹேட்ச்பேக் ரக கார்களையும் வாங்குவதற்கு நிறைய கஸ்டமர்கள் குவிகின்றனர். இதற்கு காரணம், விலை குறைவான கார்கள் பெரும்பாலானவை ஹேட்ச்பேக் கார்களாக உள்ளன. குறிப்பாக, மாருதி சுஸுகி நிறுவனம் பல்வேறு விதமான ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்கிறது. அவற்றுள், நிறைய நேரங்களில் முன்னிலை வகிப்பது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும். அப்படி எத்தனை ஸ்விஃப்ட் கார்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.

இந்தியாவில் மக்கள் பலர் வாங்கும் காராக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் உள்ளது. அதாவது, எஸ்யூவி, செடான், ஹேட்ச்பேக் என அனைத்தையும் சேர்த்தால் கூட நிறைய மாதங்களில் இந்தியாவின் நம்பர் ஒன் காராக ஸ்விஃப்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. இது இப்போது அல்ல... 2005ஆம் ஆண்டில் ஸ்விஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பலரது தினசரி காராக இது மாறியுள்ளது.

maruti suzuki sold 16241 swift

மிகவும் காம்பெக்ட்டான உடலமைப்பில் உருவாக்கப்படுவதால், அதற்கேற்ப ஸ்விஃப்ட் காரின் விலைகளும் குறைவாக நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும், ஸ்விஃப்ட் காரை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாருதி சுஸுகி நிறுவனம் தவறாமல் அப்டேட் செய்துவிடுகிறது. சமீபத்தில், கடந்த 2024 மே மாதத்தில் 4ஆம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உடன் மாருதி சுஸுகி அறிமுகம் செய்தது.

இதன் மூலமாக, மாதந்தோறும் 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ஸ்விஃப்ட் கார்கள் அசால்ட்டாக விற்பனையாகுகின்றன. கடந்த 2024 செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரையில், கடந்த மாதத்தில் மொத்தம் 16,241 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 10% அதிகமாகும்.

maruti suzuki sold 16241 swift

ஏனெனில், அந்த மாதத்தில் 14,703 ஸ்விஃப்ட் கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. தற்சமயம் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் இசட்-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 81.58 பிஎஸ் மற்றும் 111.7 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் மூலமாக 25கிமீ-க்கும் அதிகமான மைலேஜை ஸ்விஃப்ட் காரில் பெற முடிகிறது.

ஸ்விஃப்ட் காரின் தொடர் வெற்றிக்கு இந்த அதிகப்படியான மைலேஜ் அளவும், குறைந்த பராமரிப்பு செலவும் முக்கியமான காரணங்களாக விளங்குகின்றன. இது இல்லாமல், இன்னும் கூடுதல் மைலேஜை எதிர்பார்ப்பவர்களுக்காக ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, டாக்ஸி உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் விற்பனை செய்யப்படுகிறது.

maruti suzuki sold 16241 swift

பயணிகள் மற்றும் காரின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் உடன் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவையும், இவற்றுடன் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடிய 9-இன்ச் ஸ்மார்ட்பிளே புரோ+ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

இவை மட்டுமின்றி, வயர்லெஸ் போன் சார்ஜர், அர்கமைஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி வசதி போன்றவையும் ஸ்விஃப்ட் காரில் இடம்பெறுகின்றன. மார்க்கெட்டில் தற்சமயம் ஸ்விஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.9.50 லட்சம் வரையில் உள்ளன. லஸ்டர் நீலம் மற்றும் நோவல் ஆரஞ்ச் உள்பட பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்களில் ஸ்விஃப்ட் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இத்தனைக்கும், பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே இந்த மாருதி ஹேட்ச்பேக் கார் விற்பனை செய்யப்படுகிறது. அப்படியிருந்தும், ஒவ்வொரு மாதத்திலும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகுகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2024, 11:20 [IST]
English summary
Maruti suzuki sold 16241 swift cars in september 2024 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X