இந்தியர்கள் இந்த காரை கண்ணு-மண்ணு தெரியாம வாங்கிட்டு இருக்காங்க போல! 30 லட்சத்தை கடந்த ஸ்விஃப்ட் விற்பனை!
இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்று என மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரை மிக தாராளமாகக் கூறலாம். இதனால்தான் மூன்று தலைமுறைகளைக் கடந்து தற்போது நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட்-ம் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்திலேயே நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முந்தைய தலைமுறை ஸ்விஃப்ட் கார் மாடல்களைப் போலவே புதிய தலைமுறை ஸ்விஃப்ட்-க்கும் இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.
இந்த நிலையிலேயே ஸ்விஃப்ட் 3 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை எனும் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை இந்தியாவில் படைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஸ்விஃப்ட் கார் முதல் முதலில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதில் இருந்து கிடைத்த விற்பனை எண்ணிக்கை ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் இந்த காரை 2005 ஆம் ஆண்டு மே மாதத்திலேயே முதன்முதலில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஆகும். குட்டியான தோற்றம், அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் திறன், சிறந்த ஹேண்ட்லிங்கை வழங்கும் வசதி உள்ளிட்டவற்றின் காரணமாகவை இந்தியர்கள் இந்த காரின் குவிந்துக் கொண்டிருக்கின்றன.
இதேபோல், விலை மற்றும் பராமரிப்பு செலவும் குறைவு என்பதாலே இந்த காருக்கு இந்தியர்கள் மிக அமோகமான வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். 2005 அறிமுகத்தைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் விற்பனை சாதனையையும், 2018 ஆம் ஆண்டில் 2 மில்லியன் விற்பனை சாதனையையும் இந்த கார் படைத்தது குறிப்பிடத்தகுந்தது.
இதனைத் தொடர்ந்தே தற்போது 2024 ஜூன்-இல் 3 மில்லியன் விற்பனை எனும் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் படைத்திருக்கின்றது. அதேவேளையில், உலக அளவில் ஒட்டுமொத்தமாக 6.5 மில்லியன் விற்பனையை இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் இந்தியாவிலேயே ஸ்விஃப்ட் காருக்கு மிக பெரிய சந்தை நிலவிக் கொண்டிருக்கின்றது என்பது துள்ளியமாக தெரிய வந்திருக்கின்றது.
சுஸுகி ஹயபுசா பைக்கை தழுவி உருவாக்கப்பட்டதே ஸ்விஃப்ட் ஆகும். இந்த காரே ஹேட்ச்பேக் பிரிவில் முதல் முறையாக க்ளைமேட் கன்ட்ரோல், ஏர் பேக்குகள், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய அம்சங்களுடன் விற்பனைக்கு வந்தது. ஜி13 1.3 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சினிலேயே இது முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அதிக செயல்திறன்மிக்க எஞ்சின் இதுவாகும். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது தலைமுறை ஸ்விஃப்ட் காரில் கே12 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டது. இத்துடன், 1.3 லிட்டர் ஆயில் பர்னர் எஞ்சினும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்பட்டது.
இரண்டாம் தலைமுறை 2010 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அனைத்து தலைமுறைகளுக்கும் மிக அமோகமான வரவேற்பு கிடைத்ததன் விளைவாக 2018 ஆம் ஆண்டில் மூன்றாம் தலைமுறை மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முந்தைய வெர்ஷன்களைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய தலைமுறை இதுவாகும்.
இவை அனைத்தைக் காட்டிலும் மிக சிறந்த தலைமுறையாகவே தற்போது நான்காம் தலைமுறை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு உள்ளது. பலதரப்பட்ட புதிய தொழில்நுட்ப வசதிகளை இது கொண்டிருக்கின்றது. 1.2 லிட்டர் இசட் சீரிஸ் எஞ்சின் நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 81.58பிஎஸ் பவரையும், 111.7 என்எம் டார்க் ஆற்றலையும் வெளியேற்றும் திறன் கொண்டது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த எஞ்சின் அதிக திறனை வெளியேற்றக் கூடியது மட்டுமல்ல, அது அதிக மைலேஜை வழங்கக் கூடியதும் கூட.
ஒரு லிட்டருக்கே 25.75 கிமீ வரையில் இது மைலேஜ் தரும். இத்துடன் மிக சிறந்த பாதுகாப்பை வழங்கும் நோக்கில் புதிய ஸ்விஃப்ட் காரில் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் மற்றும் மும்முனை சீட் பெல்ட் ரிமைண்ட் செய்யும் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிராவும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. சிறப்பம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 9 அங்குல ஸ்மார்ப்ளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜர், சுஸுகி கன்னெக்ட், வேகமாக செல்போனை சார்ஜ் செய்யும் வசதிக் கொண்ட ஏ மற்றும் சி ரக யுஎஸ்பி சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, பின்னிருக்கைக்கு என தனி ஏசி என ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய ஸ்விஃப்ட் ரூ. 6.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், இதன் அதிகபட்ச விலையே ரூ. 9.64 லட்சமாக மாட்டுமே இருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக 11 விதமான வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டின் விற்பனை மைல்கல், அதன் ஸ்டைல், செயல்திறன் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றிற்கு கிடைத்த மிக சிறந்த அங்கீகாரம் என கூறலாம். இந்த கார் அடுத்தடுத்து வரும் நாட்களிலும் இதுபோன்று இன்னும் பல வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








