கம்மியான விலையில் காரை வாங்கிவிட்டு, இப்படி கூட மாற்றி கொள்ளலாமா!! மாருதி கார் இது என சொன்னால் நம்ப முடியுதா?
2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார் ஒன்று அளவில் பெரியதான அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே கவர்ச்சிக்கரமாக இருக்கும் இந்த குறிப்பிட்ட மாடிஃபைடு ஸ்விஃப்ட் காரை பற்றியும், இந்த காரில் வேறென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மாருதி சுஸுகி நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நியூ ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் காரை இந்த மே மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த காருக்கான முன்பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட நிலையில், புக் செய்தவர்களுக்கு கார்களை டெலிவிரி கொடுக்கும் பணிகள் சில தினங்களுக்கு முன் ஆரம்பமாகின.

அப்படியென்றால், 2024 ஸ்விஃப்ட் கார் கஸ்டமர்களின் கைகளில் வந்துசேர ஆரம்பித்துவிட்டது. ஆதலால், எப்போதும்போல் சில கஸ்டமர்கள் தங்களது புதிய ஸ்விஃப்ட் காரை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் மாடிஃபிகேஷன் செய்ய ஏற்ற கார் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும். மாடிஃபை செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார்கள் பலவற்றை இதற்கு நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.
அந்த வகையில், இந்த புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் 17, 18 மற்றும் 20-இன்ச் ஆஃப்டர் மார்க்கெட் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட ஸ்விஃப்ட் கார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தது. பஞ்சாப்பில் கார்களுக்கான பிரத்யேகமான அலாய் சக்கரங்களை உருவாக்கி பொருத்துவதை அங்குள்ள மக்கள் ஆர்வமாக மேற்கொள்வது வழக்கம்.

பஞ்சாப்பில் மட்டுமில்லாமல், இந்தியாவின் நிறைய பகுதிகளில் கஸ்டமர்கள் தங்களது கார்களில் பெரிய அளவிலான சக்கரங்களை பொருத்த விரும்புவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அலாய் சக்கரங்களை பொருத்தியது மட்டுமின்றி, இந்த ஸ்விஃப்ட் காரின் உரிமையாளர் தனது காரின் ஃபாக் விளக்குகள், ORVM கவர்கள் உள்ளிட்ட பாகங்களுக்கு க்ரோம் கார்னிஷை வழங்கியுள்ளார். இதனால், அந்த பாகங்கள் பளபளப்பாக காரில் இருந்து தனியாக தெரிகின்றன.
பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரத்தில் உள்ள ஒரு மெக்கானிக் ஷாப்பில் இந்த ஸ்விஃப்ட் கார் இவ்வாறு மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. டர்ன் இண்டிகேட்டர்கள் காரின் ஃபெண்டர்களில் வழங்கப்பட்டுள்ளதால், இந்த குறிப்பிட்ட ஸ்விஃப்ட் கார் ஆனது விலை குறைவான வேரியண்ட்டாக இருக்கலாம். அதுமட்டுமின்றி, கதவு கைப்பிடிகள் மற்றும் டி.ஆர்.எல்-கள் காரின் உடல் நிறத்தில் வழங்கப்படவில்லை.

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஸ்விஃப்ட் காரில் 14 இன்ச்சில் சக்கரங்களை வழங்குகிறது. ஸ்விஃப்ட் காரின் விலை குறைவான வேரியண்ட்களில் இரும்பு சக்கரங்களும், விலைமிக்க வேரியண்ட்களில் அலாய் சக்கரங்களும் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்த கஸ்டமைஸ்டு ஸ்விஃப்ட் காரில் 17-இன்ச்சில் அலாய் சக்கரங்களை பொருத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த 17-இன்ச் சக்கரங்களில் மல்டி-ஸ்போக் வழங்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, இதே மெக்கானிக் ஷாப் மற்றொரு ஸ்விஃப்ட் காரில் 18-இன்ச் சக்கரங்களையும், இன்னொரு ஸ்விஃப்ட் காரில் ட்யூயல்-டோனில் 20-இன்ச்சில் அலாய் சக்கரங்களையும் பொருத்தியுள்ளது. இந்த 3 ஸ்விஃப்ட் கார்களையும் இந்த மெக்கானிக் ஷாப் பணியாளர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 14-இன்ச் சக்கரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 17-இன்ச் சக்கரங்களை பொருத்திய போதிலும், அந்த ஒரு குறிப்பிட்ட ஸ்விஃப்ட் காரில் மட்டும் பெரியதாக பிரச்சனை இருப்பது போல் தெரியவில்லை. ஆனால், 18-இன்ச் மற்றும் 20-இன்ச் ஆஃப்டர் மார்க்கெட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள ஸ்விஃப்ட் கார்கள் சற்று முரண்பாடுடன் தென்படுகின்றன. அதாவது, சக்கரங்கள் காரின் அடிப்பகுதியை இடிப்பது உள்ளன.


Click it and Unblock the Notifications









