மைலேஜ்ல டூவீலர்லாம் இந்த காருக்கு முன்னாடி ஒன்னுமே இல்ல! விலை எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Hatchback), இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள கார்களில் ஒன்றாகும். இந்த காரின் புதிய சிஎன்ஜி (CNG) வெர்ஷன், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள மாருதி சுஸுகி ஷோரூம்களுக்கு, புதிய ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் தற்போது வர தொடங்கியுள்ளது. இது இந்த காருக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் தற்போது ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ள நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் தொடங்கப்படவுள்ளன. எனவே கூடிய விரைவில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரை, இந்திய சாலைகளில் பார்க்க முடியும்.

Maruti Suzuki Swift CNG Arrives At Dealerships

செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 80 பிஹெச்பி பவர் மற்றும் 112 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது பவர் அவுட்புட் குறைவாகவே இருக்கும். அதாவது அதிகபட்சமாக 69 பிஹெச்பி பவர்/102 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கும். எனினும் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது, சிறப்பான மைலேஜை (Mileage) எதிர்பார்க்கலாம். ஸ்விஃப்ட் சிஎன்ஜி, ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி கூறியுள்ளது. இது ஒரு சில பைக்குகளை விட அதிக மைலேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Maruti Suzuki Swift CNG

சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய அதே நேரத்தில், எல்இடி லைட்கள், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின் பகுதியிலும் ஏசி வெண்ட்கள், கீலெஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் 15 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்களும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரில் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை VXi, VXi (O) மற்றும் ZXi ஆகியவை ஆகும். இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.19 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.19 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். தீபாவளி (Diwali) பண்டிகையை முன்னிட்டு, அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை வாங்கலாம் என முடிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். கடந்த ஜூலை மாதம் 16,854 என்ற விற்பனை எண்ணிக்கையையும், ஆகஸ்ட் மாதம் 12,844 என்ற விற்பனை எண்ணிக்கையையும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் பதிவு செய்திருந்தது.

இந்த சூழலில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதிக மைலேஜ் வழங்க கூடிய புதிய சிஎன்ஜி மாடல், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கு உதவி செய்யும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2024, 12:27 [IST]
English summary
Maruti suzuki swift cng arrives at dealerships video
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+