32 கிமீ மைலேஜ் தரும் ஸ்விஃப்ட் காரின் புதிய வேரியன்ட் விரைவில் விற்பனைக்கு வருகிறது! விலை இவ்வளவு கம்மியா?
மாருதி சுஸூகி நிறுவனம் சமீபத்தில் தான் தனது நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இதன் சிஎன்ஜி வேரியன்ட் கார் விரைவில் அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32 கிலோமீட்டர் வரை மைலேஜ தரும் காராக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காராக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூபாய் 6.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரை நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இந்த காருக்கான புக்கிங் குவிந்து வருகிறது. அதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அடுத்த அப்டேட்டாக இந்த ஸ்வஃ்ப்ட் காரின் சிஎன்ஜி வேரியன்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதன் சிஎன்ஜி வேரியன்ட் கார் இதுவரை அறிமுகமாகவில்லை. இதனால் வடிவமைப்பை பொறுத்தவரை தற்போது உள்ள பெட்ரோல் காரின் வடிவமைப்பிலேயே இந்த காரும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள பெட்ரோல் கார் ஏகப்பட்ட அப்டேட்களை பெற்ற காராக இருக்கிறது.
முக்கியமாக இந்த காரின் முன்பக்கம் பியானோ ஃபினிஷ் செய்யப்பட்ட முன்பக்க கிரில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட்டுகள் எல்இடி டிஆர்எல், புதிய எல்இடி டெய்ல் லைட், புதிய முன் பக்கம் மற்றும் பின்பக்க பம்பர்கள் 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. தற்போது மார்க்கெட்டில் உள்ள மற்ற கார்களுக்கு போட்டியாக இந்த காரிலும் ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இஸட் சீரியஸ் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 எச்பி பவரையும் 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு அறிமுகமாகிறது. இதே இன்ஜின் தான் சிஎன்ஜி வேரியன்டிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
. இந்த கார் விற்பனைக்கு வரும்போது ஏற்கனவே உள்ள இந்த இன்ஜினை பயன்படுத்துவதால் இதன் பவர் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜினில் இருக்கும் பவர் சிஎன்ஜி எரிபொருளை பயன்படுத்தும் போது இருக்காது அதேபோல டார்க் திறனும் குறைய வாய்ப்புள்ளது. மேலும் இந்த கார் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனில் வரும்போது மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஎம்டி கியர் ஆப்ஷனில் சிஎன்ஜி வேரியன்ட் இருக்காது.

தற்போது உள்ள பெட்ரோல் காரை பொறுத்தவரை மேனுவல் கியர் ஆப்ஷனில் 24.80 கிலோமீட்டர் மைலேஜ், ஏஎம்டி கியர் ஆப்ஷனில் 25.75 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு வரும்போது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இருப்பதிலேயே அதிக மைலேஜ் கொண்ட காராக இது இருக்கும்.
தற்போது 4ம் தலைமுறை புதிய மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 6.49 லட்சம் முதல் ரூபாய் 9.64 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதன் சிஎன்ஜி வேரியன்ட் விற்பனைக்கு வரும்போது இது பெட்ரோல் வேரியன்ட் காரை விட ரூபாய் 90 ஆயிரம் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான வேரியன்ட்களில் சிஎன்ஜி ஆப்ஷனும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
புதிய ஸ்விஃப்ட் கார் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைக்கு வந்தால் ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள டாடா டியாகோ மற்றும் ஹுண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களின் சிஎன்ஜி வேரியண்ட் உடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ சிஎன்ஜி காரைப் பொறுத்தவரை மார்க்கெட்டிலேயே ஆப்ஷன் கொண்ட ஒரே ஹேட்ச்பேக் சிஎன்ஜி காராக இருக்கிறது. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் காரில் சிஎன்ஜி ஆப்ஷன் இல்லை
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் சிஎன்ஜி ஆப்ஷனில் ஸ்விஃப்ட் காரை கொண்டு வரும்போது அதிக மைலேஜ் விரும்பும் நபர்களுக்கு இந்த கார் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் கிட்டத்தட்ட பைக் மாதிரி மைலேஜ் தரும் இந்த காரை வாங்க ஏகப்பட்ட போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்றால் யார் தான் சும்மா விடுவார்கள்.


Click it and Unblock the Notifications









