33 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் விற்பனைக்கு அறிமுகம்! விலை இவ்ளோதானா! கண்ண மூடிட்டு ஒன்னை வாங்கி போடலாம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இதன் புதிய தலைமுறை மாடல், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார். பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷனுடன் மட்டுமே களமிறக்கப்பட்டது. சிஎன்ஜி இன்ஜின் (CNG Engine) ஆப்ஷன் வழங்கப்படவில்லை. இந்த குறையை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது நிவர்த்தி செய்துள்ளது.
ஆம், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் தற்போது சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி (Maruti Suzuki Swift CNG) வெர்ஷன், செப்டம்பர் 12ம் தேதியான இன்று, சற்று நேரத்திற்கு முன்னர்தான் களமிறக்கப்பட்டது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மூலமாக இயங்கும்போது, அதிகபட்சமாக 80 பிஹெச்பி பவர் மற்றும் 112 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, அதிகபட்சமாக 69 பிஹெச்பி பவர் மற்றும் 102 என்எம் டார்க் திறனை மட்டுமே இந்த இன்ஜின் உருவாக்கும். பவர் அவுட்புட் சற்று குறைவு என்றாலும் கூட, சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும்.

அதாவது ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் மைலேஜை விட, 6 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரில், ஒரே ஒரு கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆகும். ஆனால் டிசைன் (Design) மற்றும் வசதிகள் (Features) ஆகிய அம்சங்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.
அதாவது ஸ்டாண்டர்டு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் டிசைன் மற்றும் வசதிகள்தான், சிஎன்ஜி வெர்ஷனிலும் இடம்பெற்றுள்ளன. இதில், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில்லைட்கள், 15 இன்ச் அலாய் வீல்கள், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரியர் ஏசி வெண்ட்கள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார், மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை VXi, VXi(O) மற்றும் ZXi ஆகியவை ஆகும். இதில், VXi வேரியண்ட்டின் விலை 8.19 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும்.
அதே நேரத்தில் VXi(O) வேரியண்ட்டின் விலை 8.46 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மிட்-வேரியண்ட் ஆகும். இறுதியாக ZXi வேரியண்ட்டின் விலை 9.19 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் டாப் வேரியண்ட் ஆகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு எல்லாம், புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








