இந்த மாருதி காருக்காக தானே இத்தன நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்... சிஎன்ஜி கார்கள் எண்ணிக்கை அதிகமாயிட்டு!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்வதில் கடந்த பல வருடங்களாகவே தீவிரமாக உள்ளது. இந்த வகையில், இந்திய மார்க்கெட்டில் பிரபலமான ஸ்விஃப்ட் (Swift) காரில் புதியதாக சிஎன்ஜி பவர்டிரெயின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் இந்த மாருதி சிஎன்ஜி காருக்கு ஹூண்டாய் மோட்டார்ஸின் கிராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி மற்றும் டாடா பஞ்ச் சிஎன்ஜி உள்ளிட்ட சிஎன்ஜி கார்கள் விற்பனையில் போட்டியாக விளங்குகின்றன. இந்த 3 சிஎன்ஜி கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

என்ஜின்: புதிய ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 69.75 எச்பி மற்றும் 101.8 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும். மறுப்பக்கம், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

indian cng cars comparison

இது அதிகப்பட்சமாக 69 எச்பி மற்றும் 95.2 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டாடா பஞ்ச் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது சற்று அதிகமாக 73.5 எச்பி மற்றும் 103 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஹூண்டாய் மற்றும் டாடா சிஎன்ஜி கார்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தான் கொடுக்கப்படுகிறது.

மைலேஜ்: சிஎன்ஜி கார்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இவற்றை அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG)-இல் இயக்கலாம், அதேநேரம் பெட்ரோலிலும் இயக்கலாம். சிஎன்ஜி-இல் இயக்கும்போது கூடுதல் மைலேஜை பெறலாம். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரிலும் சிஎன்ஜி-இல் மைலேஜ் 1 கிலோ சிஎன்ஜி-க்கு 32.85கிமீ எனவும், பெட்ரோலில் லிட்டருக்கு 24.8கிமீ எனவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

indian cng cars comparison

அதேபோல், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி கார் பெட்ரோலில் 20.7kmpl மைலேஜையும், சிஎன்ஜி-இல் 27kmpkg மைலேஜையும் வழங்கக்கூடியதாக உள்ளது. டாடா பஞ்ச் சிஎன்ஜி காரில் பெட்ரோலில் மைலேஜ் 20.09kmpl மற்றும் சிஎன்ஜி-இல் 26.99kmpkg ஆகும். இவை ARAI சோதனைகளின் மூலம் பெறப்பட்ட மைலேஜ் அளவுகளாகும். நிஜ உலகில் இவற்றில் இருந்து சற்று குறைவாகவே மைலேஜ் கிடைக்கும்.

விலை: புதிய ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.8.20 லட்சத்தில் இருந்து ரூ.9.20 லட்சம் வரையில் மாருதி சுஸுகி நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் விற்பனை செய்யப்படுகிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி காரை பொறுத்தவரையில், இது மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

indian cng cars comparison

இந்த விலை குறைவான ஹூண்டாய் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.68 லட்சத்தில் இருந்து ரூ.8.30 லட்சம் வரையில் உள்ளன. டாடா பஞ்ச் சிஎன்ஜி கார் ஆனது 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.23 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் ஆன்-ரோடு விலை 1 லட்சம் அளவிற்கு அதிகமாக வரலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை அனைத்தும் விலை குறைவான, பட்ஜெட் விலையிலான சிஎன்ஜி கார்கள் ஆகும். தோற்றத்தில் இவை மூன்றிலும் எந்தவொரு குறையும் இல்லை. ஆனால், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் டாடா பஞ்ச் சிஎன்ஜி கார்களில் ட்யூயல்-சிலிண்டர் டெக்னாலஜி வழங்கப்படுகிறது. ஆனால், புதிய ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரில் சிங்கிள்-சிலிண்டர் டெக்னாலஜியே தொடரப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 13, 2024, 7:00 [IST]
English summary
Maruti suzuki swift cng vs hyundai grand i10 nios cng vs tata punch cng
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X