ஆரம்பத்தில் வெறும் ரூ3.87 லட்சத்திற்கு தான் ஸ்விஃப்ட் கார் அறிமுகமானது! இப்ப என்ன விலை தெரியுமா?
மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்ற காராக இருக்கிறது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக சிறப்பான விற்பனையில் இருந்து வருகிறது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். சமீபத்தில் தான் இந்த காரின் 4ம் தலைமுறை அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் ஆனது. இந்த கார் முதன்முதலாக அறிமுகமானது. முதல் தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. என்னதான் தற்போது மைக்ரோ எஸ்யூவி செகண்ட் மக்கள் கவனம் திசை திரும்பினாலும், இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கிறது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்த காரின் வடிவமைப்பும், இந்த கார் தரும் உழைப்பும் தான். அதே நேரம் இந்த காரின் விலையும் மிகப்பெரிய காரணமாக இருந்துள்ளது. இந்த பதிவில் நாம் மாருதி ஸ்விஃப்ட் கார் அறிமுகமானது முதல் தற்போது வரை என்னென்ன விலைகளில் அறிமுகமாகியுள்ளது, அடிப்படை விலை என்ன? டாப் வேரியன்ட் விலை என்ன? இரண்டிற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? என்ற விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரின் முதல் தலைமுறை என்பது 2005ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த கார் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து விற்பனையிலிருந்து 2019 வரை இந்த கார் தான் விற்பனையில் இருந்தது. இந்த காரின் எடையை பொறுத்தவரை மொத்தம் 1,010 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அப்பொழுது இந்த கார் லிட்டருக்கு வெறும் 12.36 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்கும் திறன் கொண்டதாக இருந்தது.
2005ம் ஆண்டு இந்த கார் விற்பனைக்கு அறிமுகமானபோது ரூபாய் 3. 87 லட்சம் என்ற விலையில் பேஸ் வேரியன்ட் ரூபாய் 4.85 லட்சம் என்ற விலையில் டாப் வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டுக்கும் இடையே ₹98,000 வித்தியாசம் இருந்தது. அப்பொழுதையே கார்களின் விலை குறைவாக தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.
| Maruti Swift | Base Variant (Rs Lakh) | Top Variant (Rs Lakh) | Difference (Rs Lakh) |
| 1st Gen 2005 | 3.87 | 4.85 | 0.98 |
| 2nd Gen 2011 | 4.22 | 6.38 | 2.16 |
| 2nd Gen Facelift 2014 | 4.42 | 6.95 | 2.53 |
| 3rd Gen 2018 | 4.99 | 8.29 | 3.3 |
| 3rd Gen Facelift 2021 | 5.73 | 8.41 | 2.68 |
| 4th Gen 2024 | 6.49 | 9.64 | 3.15 |
இரண்டாம் தலைப்பு தலைமுறை ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை 2010ம் ஆண்டு அறிமுகமானது. இந்த காரின் எடை என்பது 965கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதற்கு முந்தைய காரை விட 45கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டது. இரண்டாம் தலைமுறை கார் 20.4கிலோமீட்டர் மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டது. இது முந்தைய தலைமுறை காரை விட லிட்டருக்கு 8கிலோமீட்டர் அதிகம் மைலேஜ் கொடுத்தது.
இரண்டாம் தலைமுறை ஸ்விஃப்ட் காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 4.22 லட்சம் முதல் ரூபாய் 6.38 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமானது. இந்த இரண்டுக்கும் இடையே ரூபாய் 2.16 லட்சம் வித்தியாசம் இருந்தது. இந்த காலகட்டத்தில் தான் இந்த காரின் விற்பனையும் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் தலைமுறைகாரை பொறுத்தவரை 2018ம் ஆண்டில் அறிமுகமாகி 2024ம் ஆண்டு வரை விற்பனையானது. இந்த காரின் எடையை பொருத்தவரை 95 கிலோ எடை இருந்தது. முந்தைய தலைமுறை காரைவிட 60 கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டது. இதன் மைலேஜை பொறுத்தவரை லிட்டருக்கு 22.56 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டது. முந்தைய தலைமுறையை விட 2.16 கிலோமீட்டர் மைலேஜ் அதிகம் தருகிறது.
மூன்றாம் தலைமுறை காரின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 4.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமானது. டாப் வேரியன்ட் 8.29 லட்சம் என்ற விலையில் விற்பனையானது. இந்த இரண்டுக்கும் இடையே ரூபாய் 3.30 லட்சம் இருந்தது. இந்த நேரத்தில் ஸ்விஃப்ட் காரின் விற்பனை சிறப்பாக இருந்தது.
4ம் தலைமுறை காரைப் பொறுத்தவரை இந்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு தான் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதன் எடையை பொறுத்த வரை 925 கிலோ எடை இருந்தது. முந்தைய மாடல் எடையை விட 20 கிலோ எடை அதிகரித்துள்ளது. இதன் மைலேஜ் பொறுத்தவரை இருப்பதிலேயே அதிகமாக 25.75 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பாடலை விட மூன்று புள்ளி 19 கிலோமீட்டர் மைலேஜ் அதிகமாகும்.
இதன் விலையைப் பொறுத்தவரை ரூ 6.49 லட்சம் என்ற பேஸ் வேரியன்ட் விலையிலும் ரூ9.64 லட்சம் என்ற டாப் வேரியன்ட் விலையும் அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ 3.15 லட்சம் ஆகும். இந்த காரின் விற்பனை தற்போது சிறப்பாக நடந்து வருகிறது. மக்கள் பலர் தொடர்ந்து இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் ஸ்விஃட் காரை அறிமுகப்படுத்தியது. முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த காரின் விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு விற்பதற்கு முக்கியமான காரணம் இந்த கார் குறைவான விலையிலும் அதே நேரம் மக்கள் விரும்பும் வகையில் இந்த கார் இருப்பதால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








