மிடில் க்ளாஸ் மக்களின் பென்ஸ் கார்... விலை இவ்ளோதானா... ஷோரூம்ல பெரிய கூட்டமே குவிஞ்சுகிட்டு இருக்கு...

இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதில், 3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் 15,955 ஸ்விஃப்ட் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 16,422 ஆக உயர்ந்துள்ளது.

இது 3 சதவீத வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சியின் மூலமாக, இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. முதலிடத்தில் டாடா பன்ச் (Tata Punch) கார் உள்ளது.

2024 Maruti Suzuki Swift

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் இந்த வளர்ச்சிக்கு, புதிய தலைமுறை மாடலின் வருகை முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், நடப்பு 2024ம் ஆண்டு மே மாத தொடக்கத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தலைமுறை மாடலில், 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சுஸுகி கனெக்ட், ரியர் ஏசி வெண்ட்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற பல்வேறு வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

2024 Maruti Suzuki Swift Display

செயல்திறனை பொறுத்தவரையில் இந்த காரில், புத்தம் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 80 பிஹெச்பி பவர் மற்றும் 112 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை 6.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.64 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) மற்றும் டாடா பன்ச் போன்ற கார்களுடன், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதைய நிலையில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் கிடைக்கிறது. ஆனால் கூடிய விரைவில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு பிறகு விற்பனை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2024, 23:35 [IST]
English summary
Maruti suzuki swift hatchback sales report june 2024
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+