பெங்களூருவில் சுற்றி வந்த 35 கிமீ தரும் ஸ்விஃப்ட் கார்! இந்த கார்ல அப்படி என்ன இருக்குது?
இந்தியாவில் மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காருக்கு ஹைபிரிட் தொழில்நுட்பத்தை உட்புகுத்தி புதிய வேரியன்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே சர்வதேச அரங்கில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் இந்த காரின் சோதனை நடந்து வருவது தற்போது தெரிய வந்துள்ளது. விரைவில் இந்த காரின் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் தனது நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் சிறந்த ஹேட்ச்பேக் காராக இந்த கார் தான் இருக்கிறது. பயணிகள் வாகன விற்பனையிலும் சிறப்பாக விற்பனையை இந்த கார் பெற்று வருகிறது.

இந்த 4ம் தலைமுறை அப்டேட்டில் மாருதி நிறுவனம் இந்த காரில் 1.2 லிட்டர் இசட் 12இ என்ற பெட்ரோல் இன்ஜினை பொருத்தி உள்ளது. இதற்கு முன்னர் இருந்த 4 சிலிண்டர் கே சிரீஸ் இன்ஜினிற்கு பதிலாக 3 சிலிண்டர் இன்ஜினாக இந்த காரை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இந்த காரின் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பெங்களூர் பகுதியில் மாருதி நிறுவனம் இந்த காரை சோதனை செய்யும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
பெங்களூரு பகுதியில் எந்தவித மறைப்புகளும் இல்லாமல் இந்த கார் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஸ்டார்ட்/ஸ்டாப் ஐடியல் தொழில்நுட்பம் இதில் உட்பகுத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய பேட்டரி பேக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் அதிகாரப்பூர்வமாக எவ்வளவு மைலேஜ் தரும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், நமக்கு கிடைத்த தகவலின் படி இந்த கார் ஒரு லிட்டருக்கு 35 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கார் விற்பனைக்கு வரும் பட்சத்தில் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் அளவுக்கு இந்த காரின் விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
சர்வதேச அரங்கில் சுஸூகி நிறுவனம் தனது ஸ்விஃட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் செட்டப் உடன் காட்சிப்படுத்தி மக்கள் கவனத்தை ஈர்த்தது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய இரண்டு விதமான இதுபோக முன் பக்க வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய இரண்டு விதமான டிரைவ் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது இதில் இரண்டு ஆப்ஷன்கள் எல்லாம் இடம்பெறும் என்ற தகவல் எதுவும் முழுமையாக தெரியவில்லை என்றாலும் இந்திய மக்களுக்கு தேவையான முக்கியமான ஒரு தொழில்நுட்பம் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அடாஸ் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
தற்போது பெங்களூர் பகுதியில் சோதனை செய்யப்பட்டு வரும் காரும் அதில் பொருத்தப்பட்டுள்ள அடாஸ் தொழில்நுட்பத்திற்காக சோதனை செய்யப்பட்டு வருவதாக பேசப்படுகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள அடாஸ் தொழில்நுட்பம் இந்திய டிரைவிங் கண்டிஷனுக்கு எப்படி செயல்படுகிறது என்பதை சோதனை செய்வதற்காகவே மாருதி நிறுவனம் இந்த காரை சோதனை செய்து வருவதாகவும் தெரிகிறது.
மாருதி நிறுவனம் தற்போது இ-விட்டாரா காரை இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில் இதிலும் அடாஸ் தொழிற்நுட்பம் உட்புகுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த கார் வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மக்கள் மத்தியில் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை உணர்ந்த மாருதி நிறுவனம் தனது ஸ்டிராங் தொழில்நுட்பத்தை ஸ்விஃப்ட் காரில் பூர்த்தி இந்திய மார்க்கெட்டில் களம் இறக்க திட்டமிட்டுள்ளது. மாருதி ஸ்விஃப்ட் ஹைபிரிட் கார் விற்பனைக்கு வந்தால் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.
Source: Team BHP


Click it and Unblock the Notifications









