எல்லாரும் லட்டு கொடுத்து கொண்டாட போறாங்க.. புதிய ஸ்விஃப்ட் மே 2வது வாரத்துக்குள் அறிமுகமாக போகுதா!
இந்தியாவில் புதிய ஸ்விஃப்ட் கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கிற விபரம் வெளியாகி இருக்கின்றது. ஒட்டுமொத்த இந்தியாவும், குறிப்பாக, ஸ்விஃப்ட் கார் காதலர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகவும், கனவாகவும் புதிய ஸ்விஃப்ட் காரின் வருகை உள்ளது. இதன் அறிமுக நாள் பற்றிய விபரமே இப்போது வெளியாகி உள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஆட்டோ கார் இந்தியா வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, வருகின்ற மே மாதம் இரண்டாவது வாரத்துக்குள்ளாகவே புதிய ஸ்விஃப்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த காருக்கு பெரிதும் எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்ற சூழலிலேயே அதன் அறிமுக நாள் பற்றிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றது.

ஆகையால், ஸ்விஃப்ட் கார் காதலர்கள் தற்போது குஷியில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக ஸ்விஃப்ட் இருக்கின்றது. இதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் புதிய வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
ஆகையால், வரும் நாட்களில் இந்தியாவின் நம்பர் 1 ஹேட்ச்பேக் கார் மாடலாக ஸ்விஃப்ட் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய ஸ்விஃப்ட் காருடன் சேர்த்து நிறுவனம் புதிய டிசையர் கார் மாடலையும் இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஸ்விஃப்ட் காரின் அறிமுகத்தைத் தொடர்ந்து புதிய டிசையரின் அறிமுகமும் அடுத்த ஒரு சில தினங்களிலேயே அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த கார் மாடலுக்கும் இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்படுகின்றது. காரணம், இந்த இரண்டு கார் மாடல்களும் இப்போது இருப்பதை விட அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியதாகவும், அதிக மைலேஜை தரக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன்படி, ஒரு லிட்டருக்கே 27 கிமீ வரை மைலேஜ் தரும் என நம்பப்படுகின்றது.
ஆனால், இது பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் மாருதி சுஸுகி வெளியிடவில்லை. மாருதி சுஸுகி புதிய ஸ்விஃப்ட் மற்றும் டிசையரில் இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் கே12 நான்கு சிலிண்டர் பெட்ரோல் மோட்டாருக்கு பதிலாக புதிய இசட் சீரிஸ் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் எஞ்சினைப் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகின்றது.
இத்துடன், மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அம்சமே புதிய ஸ்விஃப்ட் மற்று டிசையரை அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மாற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோட்டாருடன் சேர்த்து மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
எஞ்சினைப் போலவே வெளிப்புறத் தோற்றத்திலும் சில மாற்றங்களை மாருதி சுஸுகி புதிய ஸ்விஃப்டில் செய்திருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான பாடி பேனல்களே புதிய ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பம்பர், கிரில், பான்னெட் உள்ளிட்டவற்றை புதுப்பித்து நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது.
எனவே இன்னும் அழகானதாகவும், கவர்ச்சியானதாகவும் புதிய ஸ்விஃப்ட் மாறி இருக்கின்றது. நம்பர் பிளேட் பொருத்தப்படும் இடம்கூட சற்று பெரியதாக மாறி இருக்கின்றது. அத்துடன், புதிய அலாய் வீல், எல்இடி ஹெட்லைட், பனி மின் விளக்கு ஆகியவையும் புதிய ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, கை காரின் கதவுகளில் உள்ள கைப் பிடிகளும் வழக்கமான இடத்திலேயே வழங்கப்பட்டு இருக்கின்றன. இப்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் காரில் கைப் பிடி பில்லரில் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான பல மாற்றங்களையே புதிய ஸ்விஃப்ட்டில் மாருதி சுஸுகி செய்திருக்கின்றது.
ஆகையால், இந்த கார் இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த ஸ்விஃப்ட் பாதுகாப்பு விஷயத்திலும் மிக சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகின்றது. ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி மற்றும் மும்முனை சிட் பெல்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களே ஸ்விஃப்ட் காரில் இடம் பெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்பைக் காட்டிலும் ஸ்விஃப்ட் விற்பனைக் கணிசமாக தற்போது குறைந்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே விற்பனையை பூஸ்ட் செய்யும் விதமாக புதிய ஸ்விஃப்ட்டை விற்பனைக்குக் கொண்டு வருகின்றது, மாருதி சுஸுகி. இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில புதிய அம்சங்களுடனம் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








