இவ்ளோ கம்மியான விலைக்கு 31 கிமீ மைலேஜ் தரும் காரா! மாருதி ஷோரூம்களில் முனிவர்கள் மாதிரி தவம் இருக்கும் மக்கள்!

இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 1,76,424 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டில், 2,03,469 ஆக உயர்ந்துள்ளது. இது 15 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையையும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் தட்டி சென்றுள்ளது.

Maruti Suzuki Swift

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் இந்த சாதனைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், மைலேஜ் (Mileage) மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.38 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல்/ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.56 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. மறுபக்கம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி/மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு கிலோவிற்கு 30.90 மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Swift Interior Design

இது மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதுடன், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் ஏராளமான அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன. இதில், சுஸுகி கனெக்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சமில்லை.

பாதுகாப்பை பொறுத்தவரையில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் கேமரா உடன் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை (Price) 5.99 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது சிறப்பான விலை நிர்ணயம் என்பதுடன், இந்த காரின் டிசைனும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க கூடியதாக உள்ளது. எனவேதான் அறிமுகம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட, இன்னமும் விற்பனையில் ஸ்விஃப்ட் சாதனைகளை படைத்து கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும். பல்வேறு வசதிகள் இருப்பதும், டிசைன் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க கூடிய வகையில் உள்ளதும் இந்த காரின் கூடுதல் சிறப்பம்சங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 30, 2024, 18:20 [IST]
English summary
Maruti suzuki swift registers 15 per cent growth in 2023 best selling hatchback
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+