35 கிமீ மைலேஜை வாரி வழங்கும் காரை களத்தில் இறக்குது மாருதி! பைக் கம்பெனிகள் பொழப்புல மண்ண அள்ளி போட போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இதன் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 12,844 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,653 ஆக இருந்தது. இது 31 சதவீத வீழ்ச்சி ஆகும்.

மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 7வது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் 6.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

2024 Maruti Suzuki Swift

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.45 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 82 பிஎஸ் பவர் மற்றும் 112 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன. வசதிகளை (Features) பொறுத்தவரையில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனுடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

2024 Maruti Suzuki Swift Rear Design

மேலும் ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் கூட, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், பாதுகாப்பு வசதிகளுக்கும் (Features Safety) பஞ்சமில்லை.

இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருப்பது, இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். அதாவது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் இருந்து டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும், 6 ஏர்பேக்குகள் கிடைக்கும்.

இதுதவிர ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் கூட, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாகும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், 6 மோனோ-டோன் மற்றும் 3 ட்யூயல்-டோன் என மொத்தம் 9 கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் இந்த காரின் பூட் ஸ்பேஸ் (Boot Space) 265 லிட்டர்களாக உள்ளது. இது போன்ற சிறப்பம்சங்கள் உடன், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஒன்றாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த காரின் மேனுவல் கியர் பாக்ஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஏஎம்டி கியர் பாக்ஸ் வேரியண்ட்கள் 25.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல சாய்ஸ்!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் தற்போதைய நிலையில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் இந்த காரின் சிஎன்ஜி (CNG) வேரியண்ட்கள் வரும் செப்டம்பர் 12ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஎன்ஜி வேரியண்ட்களின் வருகைக்கு பின்னர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை உயரும் என கருதப்படுகிறது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2024, 7:15 [IST]
English summary
Maruti suzuki swift sales report august 2024 31 per cent degrowth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+