ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இந்த காரின், நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 15,728 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலமாக நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் உள்ளது மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஆகும். ஆனால் 2வது இடத்தை பிடித்திருந்தாலும் கூட, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விற்பனையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 17,559 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்திருந்தது.

ஆனால் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை, 15,728 ஆக குறைந்துள்ளது. இது 10 சதவீத வீழ்ச்சி ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் வரும் மே மாதத்தில், ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தியாவில் உள்ள ஒரு சில மாருதி சுஸுகி டீலர்ஷிப்கள், அதிகாரப்பூர்வமற்ற முறையில், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகளையும் கூட தொடங்கி விட்டன. இந்த புதிய தலைமுறை மாடலின் வருகைக்காக வாடிக்கையாளர்கள் பலரும் காத்து கொண்டுள்ளனர். அதாவது சிறிது கால காத்திருப்பிற்காக, தற்போது விற்பனையில் உள்ள மாடலை வாங்க அவர்கள் தயாராக இல்லை.

இதன் காரணமாகவே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை வீழ்ச்சியை சந்தித்திருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் புதிய தலைமுறை மாடல் களமிறங்கிய பின், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை மீண்டும் வளர்ச்சியை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் பல்வேறு அப்டேட்களுடன் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய இன்ஜின் ஆப்ஷன்கள் கூட வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடலின் அறிமுகத்திற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருக்கின்றன. எனவே சற்று பொறுமையாக காத்திருந்து, பல்வேறு அப்டேட்களுடன் வரவுள்ள புதிய தலைமுறை மாடலை வாங்குவதே வாடிக்கையாளர்களின் பலரின் எண்ணமாக இருக்கும்.
இதன் காரணமாகவே தற்போது சந்தையில் உள்ள மாடல், விற்பனையில் சரிவை சந்தித்திருக்கும் என நாங்கள் கருதுகிறோம். மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடலை தொடர்ந்து, டிசையர் (Dzire) காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு களமிறக்கவுள்ளது.
இதுதவிர இவிஎக்ஸ் (eVX) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய கார்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு வரவுள்ளன. எனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய கார்களுக்காக காத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்தான்!


Click it and Unblock the Notifications








