33 கிமீ மைலேஜ் குடுக்கற காரோட விலை இவ்ளோ கம்மியா! செகண்ட் ஹேண்ட் கார் வாங்கி கஷ்டப்படுறதுக்கு இத வாங்கீரலாம்!

இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள மாடல்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்னமும் கூட மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விற்பனையில் சாதனைகளை படைத்து கொண்டுள்ளது. நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதமும் அது தொடர்ந்துள்ளது. இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் (Top 10 Hatchback Cars) பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ஆனால் முதல் இடத்தை பிடித்திருந்தாலும் கூட, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. அதாவது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 20,598 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்திருந்தது.

Maruti Suzuki Swift Side Design

ஆனால் இந்த எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17,539 ஆக குறைந்துள்ளது. இது 15 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் இது தற்காலிகமான சரிவாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். கூடிய விரைவிலேயே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்த சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை 6.49 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.45 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது நடுத்தர வர்க்க மக்களுக்கான கார் என்றாலும் கூட, ஏராளமான வசதிகளை (Features) கொண்டதாக உள்ளது.

Maruti Suzuki Swift

இதில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் ஏசி, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் இருக்கும். இதுதவிர ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இவை எல்லாம் தவிர, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற வசதிகளையும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் கொண்டுள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் அதிக வசதிகளை கொண்டிருப்பதுடன், நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகவும் இருக்கிறது.

இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இந்த காரின் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் இதை விட அதிக மைலேஜ் வழங்க கூடியவை.

அதாவது ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios), ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber), ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்களுக்கு எல்லாம் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், மிடில் க்ளாஸ் குடும்பங்களுக்கு மிகவும் ஏற்ற காராக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் திகழ்கிறது. ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக வசதிகள் மற்றும் மைலேஜ் கொண்ட ஒரு ஹேட்ச்பேக் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, November 16, 2024, 11:57 [IST]
English summary
Maruti suzuki swift sales report october 2024 15 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+