பைக்கிற்கு இணையாக மைலேஜ் தரும் இரு மாருதி கார்களில் எது பெஸ்ட்? விலையை பார்த்துட்டு ஒரு முடிவு எடுங்க!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யும் முன்னணி கார் நிறுவனம். மாருதி சுஸுகியின் பெரும்பாலான கார்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. அத்தகைய கார்களுள் முக்கியமான இரு கார்கள் ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ ஆகும். இரண்டும் ஹேட்ச்பேக் ரக கார்கள் தான். ஆனால், ஸ்விஃப்ட்டை காட்டிலும் பலேனோ ஆனது பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காராக விளங்குகிறது. இந்திய மக்கள் பலருக்கு விருப்பமான கார்களாக விளங்கும் இவை இரண்டிற்கு இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

வெளிப்பக்க தோற்றம்: தோற்றத்தை பொறுத்தவரையில், ஸ்விஃப்ட்டை அடித்து கொள்ள எந்த காரும் கிடையாது. ஏனெனில், அந்த அளவிற்கு காம்பெக்ட்டான உடலமைப்பில் ஸ்டைலிஷாக ஸ்விஃப்ட் உருவாக்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஸ்விஃப்ட் வெளிப்பக்க தோற்றத்தில் இன்னும் மெருக்கேற்றப்பட்டுள்ளது. L-வடிவ எல்இடி ஹெட்லேம்ப்களை கொண்ட ஸ்விஃப்ட் கார் ஆனது குறிப்பாக இளம் தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கப்படுகிறது.

maruti suzuki swift vs baleno

மறுப்பக்கம், பலேனோ ஆனது பெரிய பொறுப்பை வகிக்கும் குடும்பஸ்தரர்களுக்கு ஏற்ப மெச்சூரான தோற்றத்தில் வடிவமைக்கப்படுகிறது. இந்த இரு ஹேட்ச்பேக் கார்களும் மாருதி சுஸுகியின் ஒரே மாதிரியான ஹார்டெக்ட் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுகின்றன. ஸ்விஃப்ட் உடன் ஒப்பிடுகையில் பலேனோ உயரம் குறைவானது. ஆனால், நீளத்திலும், அகலத்திலும் பெரியது. இதற்கேற்ப, 16-இன்ச்சில் நன்கு பெரிய சக்கரங்கள் பலேனோவில் பொருத்தப்படுகின்றன.

உட்பக்க தோற்றம்: உட்பக்க டேஸ்போர்டு தோற்றத்தில் இந்த இரு கார்களுக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஸ்விஃப்ட்டின் கேபின் முழுவதுமாக அடர் கருப்பு நிறத்தில் இளம் தலைமுறையினருக்கு பிடித்தது போன்று வடிவமைக்கப்படுகிறது. பலேனோவில் வழங்கப்படும் நிறைய அம்சங்கள் ஸ்விஃப்ட்டிலும் வழங்கப்படுகின்றன. அதேபோல், இந்த இரு கார்களிலும் வலிமையான பிளாஸ்டிக்கால் உட்பக்க கேபின் உருவாக்கப்படுகிறது.

maruti suzuki swift vs baleno

பலேனோ காரின் உட்புறத்தை ஸ்பெஷலானதாக காட்ட வேண்டும் என்பதற்காக இரு நிறங்களில் கேபின் வழங்கப்படுகிறது. அதேபோல், பலேனோவில் பயணிகளின் சவுகரியத்துக்காக கூடுதலாக சில அம்சங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் கொடுக்கப்படுகிறது. அதேபோல், டிரைவர் அமர்வதற்கு ஏதுவாக ஸ்டேரிங் சக்கரத்தை இந்த காரில் தேவைக்கேற்ப மடக்கி கொள்ளலாம்.

தொழிற்நுட்ப வசதிகள்: அனைத்து வசதிகளையும் பெறும் ஸ்விஃப்ட் இசட்.எக்ஸ்.ஐ+ ஏஎம்டி வேரியண்ட்டின் விலை ரூ.9.44 லட்சம், பலேனோ ஆல்பா ஏஎம்டி வேரியண்ட்டின் விலை ரூ.9.83 லட்சம். ஸ்விஃப்ட்டை விட பலேனோ வெறும் ரூ.39,000 மட்டுமே அதிகம். ஆனால், ஸ்விஃப்ட்டை விட பலேனோவில் வழங்கப்படும் கூடுதலான அம்சங்கள் என்று பார்த்தால், இந்த ரூ.39,000ஐ காட்டிலும் அதிகமாகும். முக்கியமாக, பலேனோவில் நன்கு அகலமான டயர்கள் பொருத்தப்படுகின்றன.

maruti suzuki swift vs baleno

என்ஜின்: புதிய ஸ்விஃப்ட் காரில் முற்றிலும் புதிய 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 82 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிபடுத்தக்கூடியதாக உள்ளது. அதுவே, பலேனோவில் பொருத்தப்படும் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 90 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதன் விளைவாக, 0-இல் இருந்து 60kmph வேகத்தை எட்ட ஸ்விஃப்ட் ஏஎம்டி காரில் 7.38 வினாடிகளும், பலேனோ ஏஎம்டி காரில் 6.95 வினாடிகளும் தேவைப்படுகின்றன.

டிரைவிங் கண்ட்ரோல்: புதிய ஸ்விஃப்ட் காரில் கொண்டுவரப்பட்டுள்ள சில திருத்தங்கள் காரின் டிரைவிங் கண்ட்ரோலை பெரிய அளவில் மேம்படுத்தி உள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த மற்றும் வளைவான சாலைகளில் ஸ்விஃப்ட்டில் ஸ்டேரிங் சக்கரத்தை கையாள்வது எளியதாக உள்ளது. பலேனோவில் மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்படுவதால், இந்த காரில் குறைவான வேகத்தில் செல்லும்போது மிகவும் சொகுசான பயணத்தை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இளம் தலைமுறையினருக்கு ஸ்விஃப்ட் ஆனது ஏற்ற கார் ஆகும். ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வாங்கினால், ஸ்விஃப்ட்டில் மிகவும் ஜாலியான பயணத்தை பெறலாம். அதுமட்டுமின்றி, மைலேஜ் விஷயத்திலும் ஸ்விஃப்ட் தான் முன்னிலை வகிக்கிறது. ஆனால், மற்ற அம்சங்களை கருத்தில் எடுத்துக் கொண்டால், பலேனோ ஆனது சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். ஸ்விஃப்ட் ஆனது மாருதி சுஸுகியின் அரேனா ஷோரூம்களிலும், பலேனோ ஆனது நெக்ஸா ஷோரூம்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, July 14, 2024, 13:00 [IST]
English summary
Maruti suzuki swift vs baleno comparison between two iconic hatchback cars
மேலும்... #maruti suzuki #car comparison #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X