ஓலா உபேரில் கார் ஓட்டும் டிரைவர்களால் தான் இது சாத்தியமானது! மாருதியின் புதிய மைல் கல் பற்றி தெரியுமா?
மாருதி நிறுவனம் தனது டூர் ரேஞ்ச் கார்களில் 5 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய மைல் கல்லை படைத்துள்ளது. மாருதி நிறுவனத்திடம் டூர் எச் 1, டூர் எச்3, டூர் எஸ், டூர் எம், மற்றும் டூர்வீ ஆகிய கார்கள் விற்பனையில் உள்ளன. இந்த கார்கள் எல்லாம் மொத்தம் சேர்ந்து ஐந்து லட்சம் கார்கள் விற்பனையாகி உள்ளது. இந்த சாதனை குறித்த விரிவான விபரங்களை தான் காணப் போகிறோம்.
மாருதி நிறுவனம் இன்று தனது டூர் ரேஞ்ச் கார்களில் 5 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை படைத்துள்ளது. இந்த டூர் ரேஞ்ச் கார்கள் எல்லாம் கமர்ஷியல் வாகனங்களாக பயன்படுத்தப்படும் கார்களாகவும் அதாவது டூர்ஸ், டிராவல்ஸ் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் டி போர்டு ரக வாகனங்கள் தான் இந்த மாருதி நிறுவனத்தின் டூர் ரேஞ்ச் வாகனங்கள் ஆகும்.

இந்தியாவில் உள்ள கமர்சியல் வாகன செட்டாரில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் டூர் ரேஞ்ச் வாகனங்கள் மிக முக்கியமான அளவில் அதிகமாக விற்பனையாகியுள்ளன. டூர் மற்றும் டிராவல்ஸ் நடத்தும் நிறுவனங்கள் ஓலா உபேர் போன்ற ஆப் மூலம் கேப் சேவை நடத்தும் நிறுவனங்கள் பெருநகரங்களில் உள்ள ஐடி அலுவலக ஊழியர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் இப்படியான பல்வேறு விதமான பயன்பாட்டிற்கு இந்த டூர் ரக வாகனங்கள் தான் அதிகமாக பயன்படுகிறது.
மாருதி நிறுவனம் இந்த டூர் ரக வாகனங்களை வடிவமைக்கும் போது இது அதிகமான மைலேஜ், நல்ல நம்பகத் தன்மை, அதே நேரம் குறைவான பராமரிப்பு செலவில் இயங்கும் வகையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற கார்களில் உள்ள அம்சங்கள் எல்லாம் இதில் தேவையான அம்சங்கள் மட்டுமே வழங்கப்பட்டு தேவையில்லாத அம்சங்கள் எல்லாம் நீக்கப்பட்டு ஒரு டூர் நிறுவனம் பயன்படுத்த சிறந்த வாகனமாக தயாரிக்கப்பட்டது.
மாருதி நிறுவனம் இந்த டூர் ரக கார்களில் இன்னும் சற்று கூடுதல் வசதியாக அரசின் ஒழுங்கு அமைப்புடன் சிஎன்ஜி ஆப்ஷனையும் வழங்கி வந்தது. இதனால் வாகனத்தின் பயணச் செலவு என்பது வெகுவாக குறையும் அதே நேரம் இந்த வாகனங்களால் ஏற்படும் மாசுவும் அதிகமான அளவு குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அனைத்து டூர் ரேஞ்ச் கார்களிலும் சிஎன்ஜி ஆப்ஷனை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.
மாருதி ஆல்டோ கே 10 காரை அடிப்படையாகக் கொண்ட டூர் எச் 1 என்ற காரும், வேகன் ஆர் காரை அடிப்படையாகக் கொண்ட டூர் எச்3 என்ற காரும், டிசையர் காரை அடிப்படையாகக் கொண்ட டூர் எஸ் என்ற காரும் எர்டிகா காரை அடிப்படையாகக் கொண்ட டூர் எம் என்ற காரும், ஈக்கோ வேனை அடிப்படையாகக் கொண்ட டூரி வி என்ற காரும் மாருதி நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த டூர் ரேஞ்ச் கார்களுக்கு மாருதி நிறுவனம் ஸ்மார்ட் பைனான்ஸ் என்ற புரோகிராமையும் வழங்கி வருகிறது. இதன்படி டாக்ஸி ஓனர்களுக்கு குறைவான வட்டியில் இந்த காரை கடன் மூலம் பெற முடியும் ஆப்ஷன் இருந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தனியாகவும் பிளக்ஸ் சிபில் பைனான்ஸ் ஆப்ஷன் உடன் இந்த காரை லோன் முறையில் வாங்கலாம். குறைவான டவுண் பேமெண்ட் இந்த காரை வாங்க முடியும்.
இந்த டூர் ரேஞ்சில் உள்ள அனைத்து கார்களும் சேர்த்து 5 லட்சத்திற்கும் அதிகமாக மாருதி நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது நிச்சயம் பெரிய சாதனை தான். இந்தியாவில் டிராவல்ஸ் மற்றும் கமர்சியல் போக்குவரத்திற்கான செக்மெண்ட் வேகமாக வளர்ந்து வருகிறது. இது இந்தியாவில் வளர்ச்சியை காட்டுகிறது. அடுத்தடுத்த தலைமுறை கார்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். என்பதற்கு சாட்சியாகிறது.
இது மட்டுமல்ல இந்த டூர் வாகனத்தால் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இதன் மூலம் பலர் பயன்பட்டு வருகின்றனர். இந்த கார்களை வாங்கி டிராவல்ஸ் நடத்தும் இளைஞர்களும் இருக்கிறார்கள். டிரைவிங் திறன் கொண்ட பலர் இந்த கார்களை ஓட்டி தங்கள் வருமானத்தை ஈட்டும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூர் செக்மெண்டில் வாகனங்களின் விற்பனை என்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது இதற்கு முக்கியமான காரணம் புதிய வகை தொழில்கள் இந்த டிராவல்ஸ் செக்மெண்டில் துவங்கி உள்ளது தான். மேலும் இந்த ரக தொழில் மிக லாபமான தொழிலாக இருப்பதால் பலர் இந்த தொழிலை செய்ய விரும்பி வருகின்றனர். இதனால் கார்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ளது


Click it and Unblock the Notifications








