இந்த காரை பார்த்தாலே போலீஸ் கொத்தா தூக்கிடுவாங்க!! லட்சங்களை செலவு செய்து காரை வாங்கி என்ன பிரயோஜனம்!
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza) டீசல் கார் ஒன்று பயங்கரமான சத்தத்தை வெளிப்படுத்தக்கூடியதாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த மாடிஃபை செய்யப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
கார்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்துக் கொள்ளும் பழக்கம் நம் இந்தியாவிலும் கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது, எலக்ட்ரிக் கார்களை கூட நம் இந்தியர்கள் மாடிஃபை செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், டீசல் கார்களை அதிகளவில் மாற்றம் செய்வதில்லை. ஏனெனில், டீசல் என்ஜின்கள் மிகவும் சிக்கலானவை. அவற்றில் கை வைத்தால் பெரிய பிரச்சனையை கொண்டுவந்து விடுவதற்கும் வாய்ப்புள்ளது.

இதனால், டீசல் கார்களில் பெரும்பாலும் வெளிப்பக்க மற்றும் உட்பக்க தோற்றத்தை மட்டுமே மாற்றம் செய்வார்கள். ஆனால் இங்கு சிலர், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா டீசல் காரின் இயந்திர பாகங்களை மாற்றி, காரில் இருந்து அதிக சத்தம் மற்றும் புகை வெளிவரும் வகையில் கொண்டுவந்துள்ளனர். இதனால், இந்த மாடிஃபை செய்யப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா கார் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் மாறியுள்ளது.
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் தற்சமயம் விற்பனையில் இல்லை. இதன் அடுத்த தலைமுறை மாடலாக பிரெஸ்ஸா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, காரின் பெயரில் இருந்து 'விட்டாரா'-ஐ மாருதி சுஸுகி நீக்கியது (வேறொரு காருக்கு சூட்டுவதற்காக). அதேபோல், டீசல் என்ஜின்களை உற்பத்தி செய்வதையும் மாருதி சுஸுகி முற்றிலுமாக 2019-20 சமயத்தில் நிறுத்திவிட்டது.

டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்ட கடைசி மாருதி கார்களுள் ஒன்று விட்டாரா பிரெஸ்ஸா ஆகும். இத்தகைய டீசல் காரை தான் தற்போது இங்கு சிலர் மாடிஃபை செய்துள்ளனர். இந்த கார் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், காரில் இருந்து எந்த அளவிற்கு இரைச்சலூட்டுகிற மற்றும் மோசமான சத்தம் வெளிவருகிறது என்பதை கேட்கலாம்.
இதற்காக, காரை ஒரே இடத்தில் நிற்க வைத்து, என்ஜினை முழு வேகத்தில் இயக்கி காட்டியுள்ளனர். இந்த மாடிஃபை செய்யப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா காரில் இதற்காகவே பிரத்யேகமான எக்ஸாஸ்ட் குழாய்களை பொருத்தியுள்ளனர். இந்த குழாய்களில் இருந்து சத்தத்துடன் சேர்த்து, வெள்ளை நிறத்தில் அதிகளவில் புகையும் வெளிவருவதை வீடியோவில் காணலாம்.

காரில் இருந்து வெள்ளை நிற புகை வெளிவருவதை பார்த்த நெட்டிசன்கள் சிலர், என்ஜின் சிஸ்டத்தில் உள்ள ஹெட் கேஸ்கெட் பழுதாகி உள்ளதாகவும், இதனால்தான் வெள்ளை நிற புகை வெளிவருவதாகவும் கமெண்ட்டில் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலளித்த இந்த விட்டாரா பிரெஸ்ஸா காரின் உரிமையாளர், இந்த காரின் என்ஜின் சிஸ்டத்தில் கேடலிடிக் கன்வெர்டர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும், அதிக சத்தத்திற்காக அவற்றை நீக்கியுள்ளதாகவும், அதன் காரணமாக வெள்ளை புகை வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விட்டாரா பிரெஸ்ஸா காரின் என்ஜின் சிஸ்டத்தில் மட்டுமின்றி, தோற்றத்திலும் சில மாடிஃபிகேஷன்களை செய்துள்ளனர். காரின் முன்பக்கத்தில் புதிய பம்பர் மற்றும் கிரில் பொருத்தப்பட்டுள்ளது. கிரில் பகுதியில் சில விளக்குகள் ஒளிர்வதையும் பார்க்க முடிகிறது. இதேபோல், கூடுதல் எல்இடி டி.ஆர்.எல்-கள், அலாய் சக்கரங்கள், பின்பக்கத்தில் போலியான 4 எக்ஸாஸ்ட் குழாய்கள் என காரை சுற்றிலும் ஏகப்பட்ட மாடிஃபிகேஷன்கள் இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை மாற்றங்களால், இது மாருதி கார் என்பதே ஒரு கணம் நமக்கு மறந்துவிடுகிறது. மாருதி சுஸுகி கார்களை மாடிஃபை செய்வது எளியதுதான். ஆனால் அதற்காக இத்தனை மாடிஃபிகேஷன்கள் கொஞ்சம் ஓவர். குறிப்பாக, என்ஜின் சத்தத்தை பயமுறுத்தும் வகையில் மாற்றியிருப்பது முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறது. முறையான மெக்கானிக் நிறுவனத்திடம் இந்த மாற்றங்களை செய்திருந்தால் பிரச்சனையில்லை. இல்லையென்றால், போலீசாரால் இந்த கார் அதிரடியாக பறிமுதல் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications









