34 கிமீ மைலேஜ் வழங்க கூடிய காரின் விலை இவ்ளோதானா! யாருமே எதிர்பாக்காத ட்விஸ்ட்! நம்பவே முடியலயேப்பா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம், 14,492 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு மே மாதம், 16,258 ஆக இருந்தது.
இது 11 சதவீத வீழ்ச்சி ஆகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.54 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 7.33 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது ஓரளவிற்கு குறைவான விலை என்பதுடன், மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியதாகவும் உள்ளது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 24.35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல்-ஏஜிஎஸ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.19 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

இவை எல்லாவற்றையும் விட, மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை பலரும் விரும்பி வாங்குகின்றனர். இருப்பினும் யாரும் எதிர்பாராத வகையில் அதன் விற்பனை சற்று சரிவை சந்தித்துள்ளது.
எனினும் வரும் மாதங்களில் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் சரிவில் இருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) ஆகியவை, மாருதி சுஸுகி வேகன் ஆர் காருக்கான மாற்று ஆப்ஷன்களாக உள்ளன.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், சமீபத்தில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதற்கு அடுத்தபடியாக புதிய தலைமுறை டிசையர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி வேகன் ஆர் இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வரும் ஒரு கார் ஆகும். ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் கிடைக்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் காரை வாங்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இது மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








